’ஜே ஜே’ பூஜாவை ஞாபகம் இருக்கா?.. தயாரிப்பாளர் தோளில் சாய்ந்துக் கொண்டு செம போஸ்.. இத்தனை வருட உறவா?
சென்னை: "பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொள்ளும் வெள்ளை மாதவா" என 2003ம் ஆண்டு மாதவன் உடன் ஆடிப் பாடி இலங்கையில் இருந்து தமிழில் அறிமுகமான நடிகை பூஜா உமாசங்கரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான நடிகை பூஜா ஜே ஜே படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து அட்டகாசம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம் போ, நான் கடவுள், விடியும் முன், கடவுள் பாதி மிருகம் பாதி என 2015ம் ஆண்டு வரை தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஆரஞ்சு எனும் தெலுங்கு படத்தில் நடித்த பூஜா மிரேஜ் எனும் ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட பூஜா அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிப்பதை அப்படியே நிறுத்திக் கொண்டார். ஆனால், சமீப காலமாக மீண்டும் சிங்கள படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தயாரிப்பாளர் ஒருவரின் தோள் மீது சாய்ந்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட அது வைரலாகி வருகிறது.
இலங்கையில் இருந்து இறக்குமதி: ஜே ஜே படத்தில் பூஜ ஆறிமுகமானாலும், அவரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்த இலங்கையில் இருந்து அழைத்து வந்தது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான மறைந்த ஜீவா தான். உள்ளம் கேட்குமே படத்தில் தான் பூஜா, அசின், ஆர்யா என பலரும் அறிமுகமாக வேண்டியது. அந்த படம் வெளியாக தாமதமான நிலையில், அடுத்தடுத்து உருவான படங்களில் அவர்கள் அறிமுகமானார்கள். தனது திறமையான நடிப்பின் மூலம் பல படங்களில் நடித்த பூஜா ஆர்யாவுடன் உள்ளம் கேட்குமே, நான் கடவுள், ஓரம் போ என சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
தொழிலதிபருடன் திருமணம்: சினிமாவில் மார்க்கெட் காலியாகும் சமயத்தில் பல நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்துக் கொண்டு அதன் பின்னர், சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வரிசையில், கடந்த 2016ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் பிரஷான் டேவிட் வேதகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பூஜா அதன் பின்னர் இந்திய படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டார்.

தயாரிப்பாளர் தோளில் சாய்ந்து: கடந்த ஆண்டு பல வருடங்கள் கழித்து மீண்டும் சிங்கள படமான சிகிநாயகி அதரே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். மேலும், மின்னு எனும் படத்திலும் நடித்தார். கோலிவுட் பக்கம் வருவாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது தயாரிப்பாளர் ஒருவர் தோளில் சாய்ந்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 1997ம் ஆண்டு நண்பராக கிடைத்தவர். 2015ம் என்னுடன் நடித்தார், என்றுமே நட்பாக பழகக்கூடியவர் என ராஜ் சச்சாரியாஸ் என்பவருடன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படங்களை ஷேர் செய்து பதிவிட்டுள்ளார். 44 வயதாகும் நடிகை பூஜா மீண்டும் சிம்ரன், ஜோதிகா போல தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தால், பலரும் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் என பாட ஆரம்பித்து விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











