»   »  பூஜா.. பறந்து, பறந்து பூஜா படு பிசியான லேடியாகி விட்டார்.வேகமாக போய்க் கொண்டிருந்த பூஜாவின் கேரியர் வேகத்திற்கு பிரேக் போடுவதுபோல பெங்களூர் விபத்து நடந்து விட்டது. அதிலிருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்கவந்து விட்டார்.விபத்துக்கு முன்பு நடித்துக் கொடுத்து சமீபத்தில் வெளியான தம்பி படம் சூப்பர் ஹிட்ஆகி விட்டதால், ரொம்ப சந்தோஷமாக உள்ளார் பூஜா. தான் நடித்த படம் நீண்டநாளைக்குப் பிறகு முதலிடத்தில் இருப்பதில் அவருக்கு பூரண திருப்தி.விபத்து கொடுத்த காயத்துக்கு இதமாக தம்பியின் வெற்றி அமைந்துள்ளதாம்.தம்பி படத்தில் தனக்கு நல்ல ரோல் கொடுத்ததற்காக இயக்குனர் சீமானை அவரதுஅலுவலகத்திற்குப் போய் வாய் நிறையப் பாராட்டி கையைப் பிடித்து தேங்ஸ்சொன்னாராம்.இப்போது அதே சந்தோஷத்தோடு தகப்பன்சாமி, பொறி உள்ளிட்ட படங்களில்வேகமாக நடித்து வருகிறார். பட்டியல் படம் ரிலீஸ் ஆகி அவரது சந்தோஷத்தைஇரட்டிப்பாக்கியுள்ளதாம்.பூஜாவுக்கு இன்னொரு சந்தோஷமாக சிங்களத்தில் அவர் நடித்த இரண்டு படங்களும்சுமாராக ஓடி வெற்றி பெற்றுள்ளனவாம். (இவரது தந்தை சிங்களர், தாயார் கன்னடம்)இதனால் சில புது சிங்களப் படங்கள் வந்ததாம்.ஆனால் தமிழில் மீண்டும் தனது பக்கம் காற்று வீசுவதைக் கருத்தில் கொண்டுஅப்புறம் பார்க்கலாம் என இலங்கைக்காரர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில்வைத்துள்ளாராம்.பூஜாவோட அப்பாவும், அம்மாவும் இப்போது வசிப்பது கொழும்பில்தான். அம்மணிமட்டும் தனது தம்பியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.இதனால் ஷூட்டிங்குக்காக சென்னைக்கும், அப்பன், ஆயியையப் பார்க்ககொழும்புக்குமாக பறந்து பறந்து ஓடுகிறார் பூஜா. இதனால் தேவையில்லாத வெட்டிஅலைச்சல் ஏற்படுவதால் எல்லாப் பேரையும் ஒரே இடத்தில் அடைத்துப் போடமுடியுமா என யோசித்து வருகிறாராம்.எனவே பூஜாவின் குடும்பத்தினர் பெங்களூருக்கே அல்லது சென்னைக்கோகுடியேறவுள்ளார்களாம்.தனக்கு வரும் படங்களில் கதையை விட ஹீரோ யார் என்று தான் கேட்கிறார் பூஜா.கதாநாயகன் இளையவர் என்றால் உடனே கால்ஷீட் தந்துவிடுகிறார். பெரிசுகள்என்றால் ஒதுங்கிவிடுகிறார்.

பூஜா.. பறந்து, பறந்து பூஜா படு பிசியான லேடியாகி விட்டார்.வேகமாக போய்க் கொண்டிருந்த பூஜாவின் கேரியர் வேகத்திற்கு பிரேக் போடுவதுபோல பெங்களூர் விபத்து நடந்து விட்டது. அதிலிருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்கவந்து விட்டார்.விபத்துக்கு முன்பு நடித்துக் கொடுத்து சமீபத்தில் வெளியான தம்பி படம் சூப்பர் ஹிட்ஆகி விட்டதால், ரொம்ப சந்தோஷமாக உள்ளார் பூஜா. தான் நடித்த படம் நீண்டநாளைக்குப் பிறகு முதலிடத்தில் இருப்பதில் அவருக்கு பூரண திருப்தி.விபத்து கொடுத்த காயத்துக்கு இதமாக தம்பியின் வெற்றி அமைந்துள்ளதாம்.தம்பி படத்தில் தனக்கு நல்ல ரோல் கொடுத்ததற்காக இயக்குனர் சீமானை அவரதுஅலுவலகத்திற்குப் போய் வாய் நிறையப் பாராட்டி கையைப் பிடித்து தேங்ஸ்சொன்னாராம்.இப்போது அதே சந்தோஷத்தோடு தகப்பன்சாமி, பொறி உள்ளிட்ட படங்களில்வேகமாக நடித்து வருகிறார். பட்டியல் படம் ரிலீஸ் ஆகி அவரது சந்தோஷத்தைஇரட்டிப்பாக்கியுள்ளதாம்.பூஜாவுக்கு இன்னொரு சந்தோஷமாக சிங்களத்தில் அவர் நடித்த இரண்டு படங்களும்சுமாராக ஓடி வெற்றி பெற்றுள்ளனவாம். (இவரது தந்தை சிங்களர், தாயார் கன்னடம்)இதனால் சில புது சிங்களப் படங்கள் வந்ததாம்.ஆனால் தமிழில் மீண்டும் தனது பக்கம் காற்று வீசுவதைக் கருத்தில் கொண்டுஅப்புறம் பார்க்கலாம் என இலங்கைக்காரர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில்வைத்துள்ளாராம்.பூஜாவோட அப்பாவும், அம்மாவும் இப்போது வசிப்பது கொழும்பில்தான். அம்மணிமட்டும் தனது தம்பியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.இதனால் ஷூட்டிங்குக்காக சென்னைக்கும், அப்பன், ஆயியையப் பார்க்ககொழும்புக்குமாக பறந்து பறந்து ஓடுகிறார் பூஜா. இதனால் தேவையில்லாத வெட்டிஅலைச்சல் ஏற்படுவதால் எல்லாப் பேரையும் ஒரே இடத்தில் அடைத்துப் போடமுடியுமா என யோசித்து வருகிறாராம்.எனவே பூஜாவின் குடும்பத்தினர் பெங்களூருக்கே அல்லது சென்னைக்கோகுடியேறவுள்ளார்களாம்.தனக்கு வரும் படங்களில் கதையை விட ஹீரோ யார் என்று தான் கேட்கிறார் பூஜா.கதாநாயகன் இளையவர் என்றால் உடனே கால்ஷீட் தந்துவிடுகிறார். பெரிசுகள்என்றால் ஒதுங்கிவிடுகிறார்.

Subscribe to Oneindia Tamil

பூஜா படு பிசியான லேடியாகி விட்டார்.

வேகமாக போய்க் கொண்டிருந்த பூஜாவின் கேரியர் வேகத்திற்கு பிரேக் போடுவதுபோல பெங்களூர் விபத்து நடந்து விட்டது. அதிலிருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்கவந்து விட்டார்.

விபத்துக்கு முன்பு நடித்துக் கொடுத்து சமீபத்தில் வெளியான தம்பி படம் சூப்பர் ஹிட்ஆகி விட்டதால், ரொம்ப சந்தோஷமாக உள்ளார் பூஜா. தான் நடித்த படம் நீண்டநாளைக்குப் பிறகு முதலிடத்தில் இருப்பதில் அவருக்கு பூரண திருப்தி.

விபத்து கொடுத்த காயத்துக்கு இதமாக தம்பியின் வெற்றி அமைந்துள்ளதாம்.


தம்பி படத்தில் தனக்கு நல்ல ரோல் கொடுத்ததற்காக இயக்குனர் சீமானை அவரதுஅலுவலகத்திற்குப் போய் வாய் நிறையப் பாராட்டி கையைப் பிடித்து தேங்ஸ்சொன்னாராம்.

இப்போது அதே சந்தோஷத்தோடு தகப்பன்சாமி, பொறி உள்ளிட்ட படங்களில்வேகமாக நடித்து வருகிறார். பட்டியல் படம் ரிலீஸ் ஆகி அவரது சந்தோஷத்தைஇரட்டிப்பாக்கியுள்ளதாம்.

பூஜாவுக்கு இன்னொரு சந்தோஷமாக சிங்களத்தில் அவர் நடித்த இரண்டு படங்களும்சுமாராக ஓடி வெற்றி பெற்றுள்ளனவாம். (இவரது தந்தை சிங்களர், தாயார் கன்னடம்)இதனால் சில புது சிங்களப் படங்கள் வந்ததாம்.

ஆனால் தமிழில் மீண்டும் தனது பக்கம் காற்று வீசுவதைக் கருத்தில் கொண்டுஅப்புறம் பார்க்கலாம் என இலங்கைக்காரர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில்வைத்துள்ளாராம்.


பூஜாவோட அப்பாவும், அம்மாவும் இப்போது வசிப்பது கொழும்பில்தான். அம்மணிமட்டும் தனது தம்பியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

இதனால் ஷூட்டிங்குக்காக சென்னைக்கும், அப்பன், ஆயியையப் பார்க்ககொழும்புக்குமாக பறந்து பறந்து ஓடுகிறார் பூஜா. இதனால் தேவையில்லாத வெட்டிஅலைச்சல் ஏற்படுவதால் எல்லாப் பேரையும் ஒரே இடத்தில் அடைத்துப் போடமுடியுமா என யோசித்து வருகிறாராம்.

எனவே பூஜாவின் குடும்பத்தினர் பெங்களூருக்கே அல்லது சென்னைக்கோகுடியேறவுள்ளார்களாம்.

தனக்கு வரும் படங்களில் கதையை விட ஹீரோ யார் என்று தான் கேட்கிறார் பூஜா.கதாநாயகன் இளையவர் என்றால் உடனே கால்ஷீட் தந்துவிடுகிறார். பெரிசுகள்என்றால் ஒதுங்கிவிடுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil