»   »  பூ .. பூஜா!

பூ .. பூஜா!

Subscribe to Oneindia Tamil

பூஜா மனசு பூப் போல! இளகிய மனசுக்காரரான பூஜா, கோலிவுட் நடிகைகளிடமிருந்துரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார்.

சிங்களத்து சின்னக் குயிலான பூஜா, தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பிறகு சிலமுக்கியமான விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்.

அதில் ஒன்று நல்ல தமிழிலேயே முடிந்தவரை பேசுவது, தமிழை எழுத்துக் கூட்டிப்படிக்கக் கற்றுக் கொண்டது.

தமிழ் சினிமாக்காரர்கள் யாரைப் பார்த்தாலும் தமிழிலேயே பேசுகிறார் பூஜா. அதிலும்தம்பி படத்தில் நடித்தபோது சீமான் மற்றும் மாதவனுடன் பழகியதில் தமிழ் மீதுஅவருக்கு அபார பற்று ஏற்பட்டு விட்டதாம்.


தமிழின் பெருமைகளை இருவரும் மாறி மாறி பூஜாவிடம் சொல்லியதால் தமிழ் மீதுபெரும் பக்தி பிறந்து விட்டதாம் பூஜாவுக்கு.

அதனால் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் தமிழிலேயேபேசுகிறார் பூஜா. அதிலும் திருக்குறளிலிருந்து சில குறள்களை அட்சரம் சுத்தமாக,தவறின்றி சொல்கிறார்.

தம்பி படம் எனக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்து விட்டது. நிறையப் படங்கள்வருகிறது. ஆனாலும் நல்ல கேரக்டர்கள் இருந்தால்தான் ஒத்துக் கொள்கிறேன்என்கிறார் சந்தோஷ பூஜா.

எனக்கு கமல் சார் மாதிரி விதம் விதமான, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கரொம்ப ஆசையாக இருக்கிறது. பிச்சைக்காரியாகவும் நடிக்கணும், அதேபோலகோடீஸ்வரி ரோலிலும் கலக்க வேண்டும்.


இரண்டையும் என்னால் செய்ய முடியும். முடிந்தவரை வித்தியாசமாக நடிக்கவேண்டும், ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும் என்பதுதான்பூஜாவின் லட்சியமாம்.

பூஜாவிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம், தன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்அதில் ஒரு பகுதியை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்திற்குக் கொடுத்து விடுகிறார்.

ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை இவ்வாறுஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுக்கிறாராம் பூஜா.


அத்தோடு நில்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மன நிம்மதிக்காகஆதரவற்றோர் இல்லம், குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று நேரத்தைசெலவிடுகிறார்.

அதேபோல எங்காவது ஒரு குழந்தையைப் பார்த்து விட்டால் போதும் ஓடோடிப்போய் அதைத் தூக்கிக் கொஞ்சாமல் விட மாட்டாராம். மாதவனுக்கு சமீபத்தில் பிறந்தகுழந்தையைக் கூட பூஜா கொஞ்சித் தள்ளி விட்டாராம்!

குழந்தையைப் போல பூஜா அதிகம் நேசிக்கும் இன்னொரு விஷயம் பூ. அது எந்தவகையான மலராக இருந்தாலும் சரி பூஜாவின் மனம் கவர்ந்து விடுமாம். பூக்களும்,குழந்தைகளும் மட்டும் என்னிடம் இருந்தால் போதும் நேரம் போவதே தெரியாதுஎன்று பூரிக்கிறார் பூஜா.


பூஜாவைப் பற்றிய புல்லரிக்கும் செய்தி ஒன்று. பொறி படத்தில் அம்மணி அழகானகிளாமர் காட்டியுள்ளாராம். நான் காட்டியுள்ள கிளாமர் கண்ணுக்கு வலிக்காமல்,மனசை மட்டும் பிசையும் என்று விளக்கம் வேறு கூறுகிறார் பூஜா.

ரொம்ப வித்தியாசமா இருக்காப்லயே!

Read more about: pooja wants different roles

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil