அண்ணன் ரிச்சர்டு!
நிறைய பேருக்கு பூஜா ஒரு "ஆய்புவான்" என்பது தெரியாது. அவரோட பாட்டி, தாத்தா எல்லாம் இன்னும் கொழும்புவில் தான்இருக்கிறார்களாம். ஆனால், இவர் கர்நாடகத்தில் வளர்ந்ததால், நான் பக்கா பெங்களூர் பொண்ணாக்கும் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, சமாளித்துவிடுகிறார் பூஜா.
இப்போது இரு 2 சிங்களப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பூஜா. ஒரு படத்தின் பெயர் அஞ்சலிக்கா. படத்தின்ஹீரோ-கம்-டைரக்டராக இருப்பது ச்சன். (பெயரே அவ்வளோதாங்க). காக்க காக்க வுட்-ஹவுஸ் காட்சிகள் சூட்டிங் நடந்த நுவரேலியாபகுதியில் தான் இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு சிங்களப் படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறதாம்.
எனது அட்டகாசம் படத்தைப் பார்த்த சிங்களப் படத் தயாரிப்பாளர்கள், நான் இலங்கையைச் சேர்ந்தவள் என்று அறிந்ததும்சந்தோஷமடைந்தனர். என்னை தங்களது படங்களில் நடிக்க அழைத்தனர். நானும் ஏற்றுக் கொண்டேன். நான் சிங்களப் பொண்ணாஇருந்தாலும் எனக்கு சிங்களம் சுத்தமா தெரியாது, அண்ணா என்கிறார்.
உங்களுக்கும் ஷாலினியின் அண்ணனும் அஜீத்தின் மச்சானுமான ரிச்சர்டுக்கும் இருந்த காதல் என்னவாச்சு? எனறு கேட்டால்,கலகலகலவென சிரிக்கிறார்.
உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள். ஷாலின் என் பெஸ்ட் பிரண்ட். அப்படித்தான் ரிச்சர்ட் பழக்கமானார். காதல் எல்லாம் இல்ல.ரிச்சடுக்கு நான் ராக்கி (பாவம் ரிச்சர்ட்!) கூட கட்டியிருக்கிறேன் தெரியுமா?. எங்களைப் போய்க் காதலர்கள் என்கிறீர்களே, அண்ணா என்றுசொல்லிவிட்டு குறுகுறுகுறுவென முறைக்கிறார். (படிக்கும் உங்களுக்கு கிறுகிறுகிறுவென ஏதாவது தலை சுற்றல் ஏற்பட்டால் நாங்கள்பொறுப்பல்ல).
இதென்ன அண்ணா, அண்ணா என்கிறீர்களா? சூட்டிங் ஸ்பாட்டில் பூஜா யாரைப் பார்த்தாலும் (அதாவது ஆம்பளைஸ்!) உடனே அண்ணாஎன்றுதான் கூப்பிடுகிறார். ரொம்ப ஜாக்கிரதை பார்ட்டி.
இதனால் பூஜாவைப் பற்றி வேறுவிதமாக நினைத்து பக்கத்தில் செல்பவர்கள், தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி என்று டி.ராஜேந்தரின்தங்கச்சி பாட்டை முனுமுனுத்தவாரே அந்தாண்ட போய் விடுகிறார்கள்.
ஜித்தன் படத்தில் பரதம் ஆடும் கேரக்டராம் பூஜாவுக்கு. இதற்காக அந்த டான்ஸை கற்க ஆரம்பித்துவிட்டார்.
அதே போல சூட்டிங் ஸ்பாட்டில் பூஜாவின் தமிழ் கண்டு பொங்கிவிட்ட கவிஞர் அறிவுமதி, இவருக்கு நல்ல தமிழ் கற்றுத் தந்தாராம்.இப்போது தமிழில் நன்கு பேசவும் பயிற்சி எடுத்து வருகிறார் தங்கச்சி பூஜா.


Click it and Unblock the Notifications