»   »  தெனாவெட்டு பூனம்

தெனாவெட்டு பூனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மரிக்கொழுந்து பூனம் பாஜ்வா, ஒரு வழியாக தமிழில் நிலையான இடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் தெனாவெட்டு படம் மூலம்.

தெலுங்குத் திரையுலகை தனது கவர்ச்சியாலும், மயக்கும் அழகாலும் ஆட்டிப் படைத்து வருபவர்தான் பூனம். பெயருக்கேற்ப படு மிருதுவாக இருக்கிறது, கண்ணை உறுத்தாத பூனத்தின் அழகும், கிளாமரும்.

டோலிவுட்டை கிறங்கடித்துக் கொண்டிருந்த பூனத்தின் அருமை பெருமைகளை அறிந்த கோலிவுட், தனது பார்வையை பூனத்தின் பக்கம் திருப்பியது.

பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூனத்தைப் போட முடிவாகியது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, பூனத்தை நீக்கி விட்டு காஜல் அகர்வாலை தனுஷுக்கு ஜோடியாக்கி விட்டனர்.

முதல் படமே இப்படி நாறிப் போனதால் கடுப்பாகிப் போன பூனம், கோலிவுட்டுக்குப் பேக்கப் சொல்லத் தயாரானார். ஆனால் அதற்குள் ஓடி வந்து விட்ட தெனாவெட்டு பட யூனிட், பூனத்திற்கு வாய்ப்பளித்து தமிழ் சினிமாவில் அவர் நுழைய அடிக்கல் நாட்டி விட்டது.

ஜீவாதான் இப்படத்தி்ன் நாயகன்.படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பூனமும் இதில் கலந்து கொண்டு ஆக்ட் கொடுத்தார்.

ஆந்திராவை அலைக்கழிக்கும் பூனம், தமிழிலும் புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil