ப்பா.. பீச்சில் யோகா செய்றாரா.. சன் பாத் எடுக்கிறாரா? பூனம் பஜ்வாவின் வேறலெவல் ஹாட்னஸ்!
சென்னை: இயக்குநர் ஹரியின் சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி இளைஞர்களை திணறடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா.
இந்நிலையில், தற்போது பீச்சில் யோகா செய்வதை போல ஒரு வீடியோவை போட்ட அவர், அடுத்தடுத்து சன் பாத் எடுப்பது போல கவர்ச்சியாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

பூனம் பஜ்வா
சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் எல்லாம் பாவாடை தாவணியில் செம க்யூட்டாக நடித்து இருப்பார் பூனம் பஜ்வா. பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து ஹீரோயின் அந்தஸ்த்தை இழந்த இவர், கிடைக்கிற கவர்ச்சி கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார். சுந்தர் சியின் அரண்மனை, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காதலருடன் டேட்டிங்
சுனில் ரெட்டி என்பவரை காதலித்து வரும் நடிகை பூனம் பஜ்வா அவருடன் ஏகப்பட்ட இடங்களுக்கு டேட்டிங் செய்து வருகிறார். நீச்சல் குளத்தில் ஜாலியாக இருவரும் இணைந்து முத்த மழைகளை பொழிந்து கொண்ட புகைப்படங்கள் எல்லாம் ஷேர் செய்து டிரெண்டாக்கினார். நிக்கி கல்ராணி, நயன்தாரா என தொடர்ந்து நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில், பூனம் பஜ்வாவும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

99 சதவீத நடிகைகள்
இன்ஸ்டாகிராமில் உள்ள 99 சதவீத நடிகைகள் இஷ்டத்துக்கு பிகினி உடைகளை அணிந்து கொண்டு பீச்சில் போட்டோஷூட் நடத்தி தினமும் வெளியிட்டு ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கே கடுப்பை கிளப்பி விடுகின்றனர். மாளவிகா மோகனன், திவ்ய பாரதி, கிரண், பூனம் பஜ்வா, பூஜா ஹெக்டே என பிகினிக்கு உண்டான மரியாதையே போக்கி விட்டனர்.

யோகா செய்யுறாரா
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதுவுமா தனது இன்ஸ்டாகிராமில் பீச்சில் யோகா செய்வது போல ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவை பதிவிட்ட பூனம் பஜ்வா. அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என அடுத்தடுத்த புகைப்படங்களில் சன் பாத் எடுக்க ஆரம்பித்து விட்டார். தற்போது அத்தனை போட்டோக்களையும் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

சன் பாத்
ரொம்ப யோகா செய்து களைத்து விட்டோம் என்கிற ரேஞ்சில் அப்படியே யோகா மேட்டை போட்டு படுத்துக் கொண்டு சன் பாத் எடுக்க ஆரம்பித்து விட்டார். கடற்கரையில் சன் டே அதுவுமா செம ஜாலியாக ரெஸ்ட் எடுக்குறீங்க போல என ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். நடிகை ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்ட பல நடிகைகள் இவரது புகைப்படங்களுக்கு லைக் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











