காதலருடன் பைக்கில் மலை பிரதேசத்திற்கு டூர் கிளம்பிய பிரபல நடிகை.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
சென்னை: காதலருடன் நடிகை பூனம் பாஜ்வா மலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராமில் எப்போதுமே படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஆண்டு இறுதியை கொண்டாட பல பிரபலங்கள் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வரும் நிலையில், நடிகை பூனம் பாஜ்வா பைக்கில் காதலருடன் டூர் கிளம்பி உள்ளார்.

கோலிவுட் என்ட்ரி
மலையாள சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜீவாவின் ஃபேவரைட் ஹீரோயினாக தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து கலக்கினார்.

சுந்தர் சி படங்களில்
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2 படத்தில் துணை நடிகையாக நடித்த பூனம் பஜ்வா அவர் ஹீரோவாக நடித்த முத்தின கத்தரிக்காய் படம் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டில் ஹீரோயின் ஆனார். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.

இன்ஸ்டாகிராமில் கலக்கல்
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நடித்து வரும் பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் செம கனெக்டில் இருந்து வருகிறார். அடிக்கடி அட்டகாசமான போட்டோஷூட்களை நடத்தி இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகின்றன.

காதலர் அறிமுகம்
கடந்த ஆண்டு காதலர் சுனில் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் படு நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது லவ் ஸ்டோரியை ரசிகர்கள் அறிய அம்பலப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

பைக் டூர்
ஆண்டு இறுதியை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் வெளிநாடுகள், மலை பிரதேசங்கள் என தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் சுற்றுலா செல்ல கிளம்பி விட்டனர். இந்நிலையில், தனது காதலர் சுனில் ரெட்டியுடன் நடிகை பூனம் பஜ்வா மலை பிரதேசத்திற்கு பைக்கில் டூர் கிளம்பியுள்ள புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

இப்பவே ஹனிமூனா
இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், மலை பிரதேசத்திற்கு இன்ப சுற்றுலாவுக்கு கிளம்பிய நடிகை பூனம் பஜ்வாவின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் இப்பவே ஹனிமூனுக்கு கிளம்பியாச்சா? நல்லா இருந்தா ஹேப்பி தான் என கமெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications