படுக்கையறையில்.. அப்படியொரு போஸ்.. என்னாச்சு பூனம் பஜ்வா.. இஷ்டத்துக்கு இப்படி இறங்கிட்டீங்க?
சென்னை: சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தற்போது சமூக வலைதளங்களில் இவரும் கிளாமர் புகைப்படங்களை பதிவிட தொடங்கி விட்டார்.
நடிகர் ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கோலிவுட்டில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
ஆனால், மார்க்கெட் சரிவு காரணமாக, மீண்டும் கோலிவுட்டில் பழைய இடத்தை பிடிக்க கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார் பூனம் பஜ்வா.

ரசிகர்களுடன்
கடந்த ஞாயிறன்று ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தியபோது, விஜய், அஜித், விக்ரம், தனுஷ், பவன் கல்யாண், யுவன் என பல பிரபலங்களின் ரசிகர்கள் தங்கள் நாயகர்கள் குறித்த கேள்விக்கு அழகாக பதில் அளித்திருந்தார் பூனம் பஜ்வா. அஜித் ரொம்ப ஹேண்ட்ஸம் ஆனவர் என்றும், விஜய் கோலிவுட்டின் மாஸ்டர் என்றும் இவர் கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

படு கிளாமராக
சுடிதார், தாவணி, புடவை என குடும்ப பெண்ணாக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா, பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் படு கிளாமராக நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டார். ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் அதே போன்ற கதாபாத்திரம் தான்.

மீண்டும் சினிமாவில்
அடுத்ததாக புதிய படங்களில் ஏதும் கமீட் ஆகியிருக்கீங்களா? என்ன படம் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, ஆம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். கொரோனா பிரச்சனைகள் முடிந்து, இந்த லாக்டவுன் நீக்கப்பட்டால், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், மீண்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளேன் எனக் கூறினார்.

படுக்கையறையில்
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா, நடிகை கிரணை போலவே ஹாட்டான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்து வருகிறார். தற்போது, பூனம் பஜ்வா, படுக்கையறையில் பக்கா கிளாமர் உடையில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்துள்ளார்.

ஐ எம் கூல்
கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களின் எனர்ஜியை சூரியன் ஸ்ட்ரா போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில், பிகினியில் நீச்சல் ஆடும் புகைப்படத்தை பதிவிட்டு, வெளியே, வெப்பம் வாட்டி வதைத்தாலும், நான் ரொம்ப கூலாக இருக்கிறேன் என நடிகை பூனம் பஜ்வா புகைப்படத்தை நேற்று வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மாஸ்டர்
மேலும், யோகா செய்யும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இப்போ தன்னை எல்லோரும் மாஸ்டர் என அழைப்பார்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார். பூனம் பஜ்வாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், யோகா மாஸ்டரா என்றும் இல்லை இல்லை நீங்கள் பரோட்ட மாஸ்டர் தான் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications