கைய அப்படி வச்சு, காலை இப்படித் திருப்பி.. வைரலாகும் பூனம் பஜ்வாவின் போட்டோஷூட் வீடியோ!
சென்னை: நடிகை பூனம் பஜ்வாவின் கிளாமர் போட்டோஷூட் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழில், பரத் நடித்த சேவல் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.
தமிழை அடுத்து, தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார் இவர்.

குப்பத்து ராஜா
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், சுதா கொங்கராவின் முதன் படமான துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜி.வி. பிரகாஷ்குமாரின் குப்பத்து ராஜா படத்திலும் நடித்திருந்தார். விஷாலின் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

வைரல் ரசிகர்கள்
இந்த கொரோனா காலத்தில் மும்பையில் இருக்கிறார், பூனம் பஜ்வா. இவரும் மற்ற நடிகைகளை போல அவ்வப்போது கிளாமர் ஸ்டில்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

காதலர் அறிமுகம்
சில நேரங்களில், ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் பூனம் பஜ்வா. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலர், சுனில் ரெட்டியை, இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சின்ன தொப்பை
இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார், பூனம். இந்தப் புகைப்படங்கள் வைரலாயின. இந்நிலையில் அவர் இப்போது, போட்டோஷூட் எடுக்கும் முன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீசும் காற்றில், கிளாமராக சின்ன தொப்பையுடன் இருக்கும் அந்த வீடியோவை ஏராளமான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர்.

வேற மாறி..
ஒருவர், எப்படி இப்படி அழகா இருக்கீங்க? என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார். இன்னொருவர், அக்கோ, வேற மாறி, வேற மாறி என்று கூறியுள்ளார். இன்னும் அப்படியே இருக்கீங்களே எப்படி? என்று சிலர் ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். பலர் அவர் ஸ்டைலை பாராட்டி இருக்கின்றனர்.
Recommended Video

என்னன்னு சொல்லுங்க
ஒரு நெட்டிசன், தலைவி நாளுக்கு நாள் அழகு கூடிட்டே போகுது என்று தெரிவித்துள்ளார். உங்க அடுத்த படத்தை ஆவலா எதிர்பார்க்கிறேன், என்னன்னு சொல்லுங்க என்று சிலர் கேட்டுள்ளனர. நடிகை பூனம் பஜ்வாவின் இந்த வீடியோ
சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











