கருப்பு பிகினியில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை பற்றவைக்கும் பூனம் பாஜ்வா!
சென்னை : குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் இருந்து இப்பொழுது கிளாமர் நடிகையாக மாறியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.
தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள பூனம் பாஜ்வா இப்பொழுது மலையாளத்தில் சரித்திரப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் பூனம்பாஜ்வா இப்பொழுது கருப்பு பிகினியில் உள்ள ஹாட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

ஹரியின் இயக்கத்தில்
இயக்குனர் ஹரியின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என நடிகைகள் பலரும் காத்து கொண்டிருக்க தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஹரியின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை பூனம் பாஜ்வா. பரத் ஹீரோவாக நடிக்க ஹரியின் இயக்கத்தில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் பூனம் பாஜ்வா.

அடக்க ஒடுக்கமான
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது பூனம்பாஜ்வா இதில் அமைதியான கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். முதல் படத்தில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடித்த பூனம் பாஜ்வா அதைத் தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு என அடுத்தடுத்து 2 படங்களில் ஜீவாவுடன் இணைந்து பட்டையைக் கிளப்பினார்.

சரித்திர திரைப்படத்தில்
அதன்பின் நடித்த துரோகி திரைப்படத்தில் கவர்ச்சிக்கு வழிவிட்ட பூனம் பாஜ்வா அதைத்தொடர்ந்து நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்பொழுது கவர்ச்சி நாயகியாக மாறியுள்ளார் . தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள பூனம் பாஜ்வா இப்பொழுது மலையாளத்தில் சரித்திர திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

கருப்பு பிகினியில் ஹாட் போஸ்
நல்ல கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க காத்துக்கொண்டிருக்கும் பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது கருப்பு பிகினியில் நீச்சல்குளத்தில் நின்றவாறு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளசுகளை பற்ற வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











