பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில் பூனம் பஜ்வா பகிர்ந்த குளுகுளு த்ரோ பேக் புகைப்படம்!
சென்னை : இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா
அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார்
கவர்ச்சி நாயகியாக திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பூனம் பஜ்வா இப்போது பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில் எடுத்த த்ரோபேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

ஹரியின் இயக்கத்தில்
தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் ஹரி. ஹரியின் திரைப்படங்கள் அனைத்த்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. இப்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் பலரும் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள் . இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா

பலரும் தயங்கும் கிளைமாக்ஸில்
பார்த்தவுடனேயே பிடித்து விடும் முகம் பளபளப்பான தேகம் என ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்த பூனம் பஜ்வாவுக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் நடிகைகள் பலரும் செய்யத் தயங்கும் கிளைமாக்ஸில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். முதல் படமே முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த பூனம் பஜ்வாவுக்கு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் வெற்றிகள் பெற்றன.

மீண்டும் ரீ-என்ட்ரி
துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களால் சிறு சறுக்கலை சந்தித்து தமிழில் மார்க்கெட்டை இழந்தார் . இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சிறிது காலம் நடிக்காமல் இருந்த பூனம் பஜ்வா மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வரும் என எதிர்ப்பார்த்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
Recommended Video

பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில்
கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார். குறிப்பாக சுந்தர் சியின் திரைப்படங்களில் கட்டாயம் இடம்பெறுகிறார். படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வரும் பூனம் பஜ்வா பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில் மரத்தின் மீது ஹாயாக சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்த த்ரோ பேக் புகைப்படத்தை நினைவு கூர்ந்து இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











