போச்சுப்பா, பூனம் ஜாவரும் வருகிறாராம் 'சிட்டி'க்கு!
மும்பை: சதீஷ் ரெட்டி தயாரிப்பில் உருவாகி வரும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் தொடர்ந்து கவர்ச்சி பிரளயங்களாக சேர்ந்து வருகின்றனர். லேட்டஸ்டாக பூனம் ஜாவரையும் பிடித்து உள்ளே போட்டுள்ளார் ரெட்டி.
பாலிவுட் படமான த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் ஏற்கனவே பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளையும், ஆச்சரியங்களையும் உருவாக்கி வருகிறது. ஏன் இத்தனை பேரை போட்டு படத்தை எடுக்கிறார்கள் என்பதே அந்த ஆச்சரியம்.
படத்தின் ஹீரோ யார் என்பதை விட இப்படத்தில் நடிக்கும் நடிகைகள்தான் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். காரணம், கவர்ச்சி நடிகைகளாக தொடர்ந்து புக் ஆகி வருகின்றனர் இப்படத்துக்காக.

வீணா முதல் தோடா வரை
வீணா மாலிக், தேவ்ஷி கந்தூரி, பைரவி கோஸ்வாமி ஆகியோர் ஏற்கனவே இப்படத்துக்காக புக் ஆகியுள்ளனர். லேட்டஸ்டாக பஞ்சாபிலிருந்து ஜோனிதா தோடாவையும் புக் செய்தார் ரெட்டி.

இப்போது பூனம் ஜாவரும்
இந்த நிலையில் தற்போது பூனம் ஜாவரையும் பிடித்துக் கொண்டு வந்துள்ளனர். கவர்ச்சியில் பட்டையைக் கிளப்புவதில் கில்லாடி இந்த பூனம் ஜாவர் என்பது பாலிவுட் ரசிகர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் இவர் இப்படத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதும் ரசிகர்களுக்கு இப்பவே புரிந்து விட்டது.

அழகிகளை எச்சரிக்கிறேன்.. பூனம் விடும் சவால்
ரசிகர்களைப் போலவே பூனம் ஜாவரும் கூட இப்படத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார். சக பாலிவுட் நடிகைகளே உஷாரா இருங்க என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிகினியில் பிரளயம்...
சிட்டி படத்தில் பிகினி உடையில் பெரும் கவர்ச்சிப் பிரளயத்தைக் கிளப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறாராம் பூனம் ஜாவர். படம் முழுக்க இவருக்கு கவர்ச்சி மட்டும்தான் வேலையாக இருக்கப் போகிறதாம். கால் அழகையும், மார்பழகையும் காட்டப் போவதாக பெருமையோடு கூறுகிறார்.

என் அழகு பிரமாண்டம்
என்னுடைய பிரமாண்ட அழகையும், கவர்ச்சியையும் பார்க்க பாலிவுட்டே தயாராகிக் கொள்ளுங்கள் என்பதுதான் நான் விடுக்கும் செய்தி. இந்தப் படம் எனது உண்மையான அழகையும், கவர்ச்சியையும் வெளிக்காட்ட நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை நான் நிச்சயம் சரியாக பயன்படுத்திக் கொள்வேன். மக்கள் மத்தியில் எளிதில் புகுந்து விடுவேன் என்று மார் தட்டிச் சொல்கிறார் பூனம்.


Click it and Unblock the Notifications











