»   »  புடிச்சாலும் புளியங்கொம்பாக பார்த்து புடிச்ச நடிகை பூனம் பாண்டே

புடிச்சாலும் புளியங்கொம்பாக பார்த்து புடிச்ச நடிகை பூனம் பாண்டே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பழம்பெரும் நடிகர் வினோத் கன்னாவின் மகனை நடிகை பூனம் பாண்டே காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

பூனம் பாண்டே செய்வதை எல்லாம் பார்க்கையில் ஷப்பா, இந்த கொசு தொல்லை தாங்கலடா சரவணா என்று தான் கூறத் தோன்றும். நானும் ஒரு மாடல், நானும் ஒரு பாலிவுட் நடிகை என்று கூறி அவ்வப்போது மீடியாவின் கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பூனம் பாண்டே.

பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுமாறு மக்களை கேட்டுக் கொண்டார். உடனே ஆளாளுக்கு யோகா செய்ய முடிவு செய்ததை பார்த்தார் பூனம்.

வீடியோ

வீடியோ

எடுடா கேமராவை புடிடா நான் யோகா செய்வதை வீடியோவை என்று பூனம் யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டார். யோகா செய்கிறேன் என்ற பெயரில் அவர் எதையோ செய்தது வேறு கதை.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம் தேடுவது என்றால் பூனம் பாண்டேவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அவ்வப்போது அரை, முக்கால் நிர்வாண படங்கள், வீடியோவை வெளியிட்டு மக்களை தன்னைப் பற்றி பேச வைப்பார்.

காதல்

காதல்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் பூனமும் கைகோர்த்து சுற்றுகிறார்களாம். அவர்கள் இருவரின் நெருக்கத்தை பார்த்தவர்கள் இது நட்பாக இருக்காது அதையும் தாண்டியது என்று தெரிவித்துள்ளனர்.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

பூனம் விளம்பரம் தேட எதை வேண்டுமானாலும் செய்வார். வினோத் கன்னாவின் மகனுடன் சுற்றினால் நிச்சயம் நல்ல விளம்பரம் தேடலாம் என்று நினைத்து அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று பாலிவுட்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Poonam Pandey is reportedly dating veteran Bollywood actor Vinod Khanna's son Sakshi Khanna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil