தான் இறந்துவிட்டதாகவே பற்றியே வதந்தி பரப்பிய பூனம் பாண்டே.. என்ன காரணம்? ஏன் இப்படி செய்தார்!
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே புற்றுநோய் பாதிப்புக் காரணமாக நேற்று காலை உயிரிழந்து விட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியானது. கடைசியில் இது பொய்யானது என்று அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
1991ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி பிறந்த பூனம் பாண்டேவுக்கு வெறும் 32 வயதுதான் ஆகிறது. சமீபத்தில் இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், பூனம் பாண்டேவும் புற்றுநோய் பாதிப்பால் இறந்து விட்டதாக செய்திகள் வந்தன.

கவர்ச்சி நடிகை: இந்தியில் 2013ம் ஆண்டு வெளியான நாஷா படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பதற வைத்தவர் பூனம் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றால் மைதானத்திலேயே நிர்வாணமாக ஓடுவேன் என சொல்லி பரபரப்பை பற்ற வைத்து தேசியளவில் பிரபலமானார். லவ் இஸ் பாய்சன் எனும் கன்னட படத்திலும், மாலினி அண்ட் கோ எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், நிர்வாணமாக வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார்.
பூனம் பாண்டே வதந்தி: கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் பூனம் பாண்டே என்றும் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியானது. கடைசியில் தற்போது அவர் கருப்பை வாய் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி பொய்யாக செய்தி பரப்பியதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஷாக்கான ரசிகர்கள்: அவரின் இந்த செயலை நெட்டிசன்கள், ஊடகத்தினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து: சாம் பாம்பே எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்த பூனம் பாண்டே கோவாவுக்கு ஹனிமூன் போகும் போதே அவர் தன்னை டார்ச்சர் செய்தார் என போலீஸில் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார். தொடர்ந்து இருவருக்கும் சண்டை வெடித்து வந்த நிலையில், இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், தற்போது புதிதாக தன் மரணம் பற்றியே பொய்யாக செய்தி பரப்பி ஸ்டண்ட் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











