விழிப்புணர்விற்காக செய்தேன்.. நான் சாகல.. மரணம் பற்றி பொய்யாக செய்தி.. பூனம் பாண்டே விளக்கம்

மும்பை: நடிகை பூனம் பாண்டே தான் இறந்துவிட்டதாக பொய்யாக செய்தி பரப்பி கருப்பை வாய் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

நேற்றுதான் நடிகை பூனம் பாண்டே செர்விகல் கேன்சர் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து #PoonamPandey என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு சமூக வலைதளங்கள் முழுவதும் பூனம் பாண்டேவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

Poonam Pandey death reason details circulated in North media

அதன் பின்னரே அவர் செர்விகல் கேன்சருக்கு விழப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி செய்தார் என்பது தெரிய வந்தது. நான் சாகவில்லை.. விழிப்புணர்விற்காக இப்படி செய்தேன் என்று பூனம் பாண்டே விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அது என்ன கேன்சர்: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் தொடங்கும் கேன்சர் உயிரணுக்களின் வளர்ச்சியாகும். கருப்பை வாய் என்பது கருப்பையின் கீழ் பகுதி ஆகும்.

எப்படி உருவாகும்?: HPV என்றும் அழைக்கப்படும் மனித பாப்பிலோமா வைரஸின் பல்வேறு strains மூலம் பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் ஏற்படும். HPV என்பது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். HPV க்கு பரவும் போது, ​​உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பொதுவாக அந்த வைரஸ் தீங்கு விளைவிக்காமல் தடுக்கிறது. ஆனாலும் சிலரும் இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.

இப்படி பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ் செல்கள்தான் கர்ப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும். கர்ப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாறிய பின் புற்றுநோய் பொதுவாக எப்படி பரவுமா அதேபோல்தான் இதுவும் பரவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X