ஒரு பாட்டு முழுக்க தம்மாத்தூண்டு ட்ரஸ்ஸில் வரப் போகிறாராம் பூனம்!!
பாலிவுட் படத்தில் நடித்துவரும் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே ஒரு பாட்டுக்காக முழுவதும் பிகினி உடையில் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இணைய தளங்களில் அதிரி புதிரி படங்களைப் போட்டு சூடேற்றி வரும் பூனம் பாண்டேவின் பிகினிப் பாடல் இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மாடலாக இருந்த பூனம் எப்படியோ நாஷா என்ற பாலிவுட் படத்தில் நுழைந்துவிட்டார். அந்த படத்தில் கவர்ச்சிக் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. இருந்தாலும் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்துப் பாட்டுக்கு முழுவதும் பிகினி உடையில் ஆடப்போகிறார் என்ற செய்திதான் இப்போது ஹாட் டாபிக் ஆக பேசப்படுகிறது.

ஆடை துறப்பேன்... அதிரடி அறிவிப்பு
விளம்பர மாடலாக இருந்த பூனம் பிரபலமானது 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்தான். இந்தியா வெற்றி பெற்றால் ஆடையின்றி மைதானத்தை வலம் வருவேன் என்று கூறி பரபரப்பு தீயை பற்றவைத்தவர்.

இணையத்தில் பரபரப்பு
தன்னுடைய பிளாக்கிலும், இணையதளத்திலும் தன்னுடைய ஆபாசப் படங்களாகப் போட்டு சூடேற்றினார் பூனம். அதைப் பார்த்த பாலிவுட் இயக்குநர்கள் இப்போது நடிக்கக் கூப்பிட்டு விட்டனர். அவரும் சந்தோஷமாக கிளம்பி விட்டார்.

படத்தின் பெயர் நாஷா
ஜிஸ்ம் படத்தை இயக்கிய அமீத் சக்சேனாதான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இதற்கு நாஷா என்று பெயரிட்டுள்ளனர். ஜிஸ்ம் படத்தில் கவர்ச்சிக்கு பிபாஷா பாசு சிக்கினார். இதில் பூனத்தை நடிக்க வைத்துள்ளனர். அதிலும் பிகினியில் வேறு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சொல்லக்கூடாத ரகசியம்
இது பற்றி பேசிய பூனம் கூறுகையில், படத்தில் ஒரு பாடலில் பிகினியில் வருகிறேன். அதற்காக இதை குத்துப் பாட்டு என்று கூற முடியாது. அதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் எனக்குச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார்.

ரொம்ப வசதியா ஃபீல் பண்றேன்
அமீத் புத்திசாலியான இயக்குநர். அவர் ஜிஸ்ம் படத்தில் பிபாஷா பாசுவை அழகாக காட்டியிருந்தார். அதேபோல் இந்த படத்தில் என்னை அழகாக நடிக்க வைத்திருக்கிறார். அவருடைய படத்தில் நடிப்பதை நான் வசதியாக உணர்கிறேன் என்று புகழ்ந்துள்ளார் பூனம்.

இது அழகான படம்
சரி படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டால், பாடல்கள் அழகாக இருக்கின்றன. படத்தில் ஸ்பைசியான டான்ஸ் இருக்கிறது. வித்தியாசமான கதை. பாலிவுட் படங்கள் என்றாலே இப்படித்தான் என்ற மக்களின் மன நிலையை முற்றிலும் மாற்றும் வகையில் இப்படம் இருக்கும் என்றும் கூறினார் பூனம் கூறியுள்ளார்.

மும்பையில் சூட்டிங்
படத்தின் 60 சதவீத ஷூட்டிங் முடிந்து விட்டதாம். அவரது கவர்ச்சிகரமான காட்சிகளை மும்பையிலேயே வைத்து படமாக்கியுள்ளனராம். மேலும் சில கவர்ச்சிகரமான காட்சிகளுக்கு பூனம் தயாராகி வருகிறாராம். அதையும் மும்பையிலேயே படமாக்கவுள்ளனராம்.
படத்தில் பிகினிப் பாட்டு இருக்குமா என்பதைக் கூட உறுதியாகச் சொல்ல முடியாது. இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் நடிப்பது பூனமாச்சே, என்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதால் ஆச்சரியத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் பூனம்.


Click it and Unblock the Notifications











