ஆப்பிளைத் தடவி அடிமையாக்குவேன்... இது பூனம்!

By Mayura Akilan

தினம் தினம் ஏதாவது சூடான படங்களைப் போட்டு பட்டையை கிளப்பி வரும் பூனம் இப்போது டிவிட்டரில் புதிதாக ஆங்கில எழுத்துக்களைப் போட்டு அதற்கு புதுவித விளக்கம் வேறு! அளித்து வருகிறார். அத்தோடு ஆப்பிளை வைத்து ஒரு கவர்ச்சி வார்த்தை விளையாட்டையும் அள்ளி விட்டுள்ளார்.

புதிய படத்திற்கு என்ன பேர்?

புதிய படத்திற்கு என்ன பேர்?

பூனம் பாண்டே இப்போது புதிதாக ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார். அதோட பெயர் என்னவென்று கேட்டு டிவிட்டர் செய்தி வெளியிட்டார். இதற்காக தினசரி ஒரு ஆல்பபெட்டை டிவிட்டரில் சொல்லி அதுகுறித்து விளக்கமும் சொல்லி வருகிறார்.

5 எழுத்துக்களை சொன்ன பூனம்

5 எழுத்துக்களை சொன்ன பூனம்

ஏ, எச், எஸ், என் ஆகிய நான்கு எழுத்துக்களை ஏற்கனவே டிவிட்டரில் சொல்லியுள்ள பூனம், இப்போது ஐந்தாவது லெட்டரை எழுதியிருக்கிறார். ‘ஏ' பார் ஆப்பிள் என்று கூறுவார்கள் ஆனால் ‘ஏ' பற்றி பூனம் கூறியிருப்பது கொஞ்சம் சூடாகத்தான் இருக்கிறது.

டாக்டர்களை அடிமையாக்குவேன்!

டாக்டர்களை அடிமையாக்குவேன்!

எல்லோரும் ஆப்பிளை சாப்பிடுவோம், டாக்டரிடமிருந்து விலகியிருப்போம் என்று சொல்வார்கள். ஆனால் நான் அப்படியில்லை. தினசரி எனது உடலில் ஆப்பிள் சாறைத் தடவி அதன் மூலம் டாக்டர்களை என் பக்கம் நெருங்கி வரச் செய்வேன். எனது உடலின் கவர்ச்சிக்கு டாக்டர்களை அடிமையாக்குவேன். என்னைப் பார்க்க தினசரி டாக்டர் வர வேண்டும் என்று கூறியுள்ளார் பூனம்.

ஏ, எச், எஸ், என், ஏ ...

ஏ, எச், எஸ், என், ஏ ...

இதுவரை ஐந்து லெட்டர்களை நான் உங்களிடையே ஷேர் செய்து விட்டேன்.முதலில் ஏ, பிறகு எச்,அப்புறம் எஸ், அதன் பின்னர் என், இப்போது மறுபடியும் ஏ. இதிலிருந்து என்ன தோன்றுகிறது உங்களுக்கு. ஏதாவது பெயர் தோன்றுகிறதா...

இந்த ஐந்து எழுத்துக்களுமே எனது புதிய படத்தின் தலைப்பில் வருகின்றன. சரி அதை விடுங்க மறுபடியும் கவர்ச்சிக்குப் போவோம்...

போதைக்கு நோ.. கவர்ச்சிக்கு எஸ்

போதைக்கு நோ.. கவர்ச்சிக்கு எஸ்

நான் எனது படத்தில் ஆல்கஹால் அல்லது போதைப் பொருளை ஆதரிப்பது போல நிச்சயம் நடிக்க மாட்டேன். ஆனால் அதை விட மிகவும் 'வசீகரமான' ஒரு விஷயம் அதில் இருக்கும். உதாரணத்திற்கு, என்னுடைய பிளாக்கிலேயே என்னுடைய சில குறிப்பிட்ட 'விஷயத்தை' பார்க்கத்தான் அதிகம் பேர் வருகிறார்கள், இல்லையா... அது போலவே இந்தப் படத்திலும் என்னுடைய 'விசேஷமான' விஷயம் இடம் பெறப் போகிறது.

'சூடான' போஸ்டரை எதிர்பாருங்க...

'சூடான' போஸ்டரை எதிர்பாருங்க...

என்னுடைய படத்தின் போஸ்டரும் கூட கலக்கலாகவே இருக்கும். அதை மறுபடியும் மறுபடியும் நீங்கள் பார்த்து ரசிப்பீர்கள். பார்த்தவர்களுக்கு மூச்சடைத்துப் போய் விடும். அப்படி இருக்கப் போகிறது போஸ்டர். இப்போது மார்க்கெட்டில் உள்ள சிலருக்கு பதிலடி தரும் வகையில் இந்த போஸ்டர் களேபரமாக இருக்கும்.

என்னோட அழகு அடிமையாக்கும்...

என்னோட அழகு அடிமையாக்கும்...

நீங்கள் முன்னழகுப் பிரியர்களாக இருந்தால், இந்தப் போஸ்டரைப் பார்த்து விட்டு, மற்ற முன்னழகு அழகிகளை புறக்கணித்து விடுவீர்கள். எனவே ரசிகர்களே, பார்த்து ரசிக்க, எனக்கு அடிமையாக காத்திருங்கள்.. வர்ட்டா.

அடேங்கம்மா... எங்க போய் முடியப் போகுதோ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X