எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சா, விடவே மாட்டேன்...'இளவரசி' பூனம் பாண்டேவின் ஆசை
மும்பை: ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தது போன்ற கேரக்டரில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன், கப்பென்று பிடித்து விடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு சர்வதேச நகைக்கடை விளம்பரத்திற்காக இளவரசி போல நகை அணிந்து, உடை அணிந்து போட்டோஷூட் நடத்தினார் பூனம் பாண்டே.
அந்த உடையிலும், நகையிலும் ஜொலி ஜொலித்த அவர் , இது தனக்குப் பிடித்துள்ளதாகவும், ஜோதா அக்பரில், ஐஸ்வர்யா ராய் நடித்தது போலவே தானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக குறிப்பிட்டார்.

கழுத்தில் தொங்கிய ரத்தினக் கல் நெக்லெஸ்
இந்த விளம்பரத்திற்காக கழுத்தில் நவரத்தினக் கற்களால் ஆன நெக்லஸை அணிந்திருந்தார் பூனம்.

ராஜ உடையில்
மேலும் ராஜ குமாரிகள் அணிவது போன்ற உடையிலும் அவர் தேவதை போல ஜொலித்தார்.

அப்படியே ஐஸ் மாதிரியே.
இதேபோன்ற நெக்லஸுடன்தான் ஐஸ்வர்யா ராய் ஜோதா அக்பர் படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சை.. சிவப்பு.. ஆஹா
இந்த நவரத்தின கல் நெக்லஸ் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தது பூனம் பாண்டேவின் கழுத்தில்.

ராணிகள், இளவரசிகளைப் போல
அந்தக் காலத்து ராணிகள், இளவரசிகள் அணிந்த உடைகள், நகைகள் குறித்து எனக்கு எப்பவுமே ஆசை உண்டு.

ஆஹா.. ஐஸ்வர்யா
அதிலும் ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யா ராயைப் பார்த்து நான் அசந்து போனவள். அப்படி ஒரு அசத்தல் அழகியாக அதில் வருவார் ஐஸ்வர்யா.

எனக்கு மட்டும் கிடைத்ததுன்னா
எனக்கு மட்டும் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் விடவே மாட்டேன். கப்பென்று பிடித்துக் கொள்வேன் என்றார் பூனம் பாண்டே.


Click it and Unblock the Notifications











