திடீரென பிரெக்னன்ட்டான பூனம் பாண்டே.. கர்ப்ப வயிறை பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்.. ஏப்ரல் ஃபூல் பிராங்கா?
மும்பை: பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே திடீரென தனது கர்ப்ப வயிறை காட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தாமல் ஷாக் ஆக்கியுள்ளது.
சாம் பாம்பே உடன் திருமணமான போது கூட பூனம் பாண்டே கர்ப்பமாகாமல் கணவருடன் சண்டைப் போட்டுப் பிரிந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது யாருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் பூனம் பாண்டே என்றும் எப்படி திடீரென கர்ப்பமானார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பமாக இருக்கும் போட்டோக்களை பார்த்த அவரது நெருங்கிய சில பாலிவுட் தோழிகளே எப்படிப்பா, இதெல்லாம் உண்மையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பேபி பம்ப் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாண்டே: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நிர்வாணமாக ஆடைகளை கழட்டப் போகிறேன் என சொன்னதில் இருந்தே இந்தியளவில் பிரபலமானார் பூனம் பாண்டே. மேலும், இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர் தனியாக ஒரு ஆப் தொடங்கி அதில், தனது பிட்டு படங்களை வெளியிட்டு சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், தற்போது திடீரென தனது பேபி பம்ப் போட்டோக்களை வெளியிட்டு தான் கர்ப்பமாக உள்ளேன் எனக் குறிப்பிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
உண்மையா? ஏப்ரல் ஃபூலா?: தனது மரணத்தையே கடந்த 2024ம் ஆண்டு பிராங்க் செய்த பூனம் பாண்டே இந்த முறை கர்ப்பமாக இருப்பதாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்து ஏப்ரல் ஃபூல் செய்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி அவரை கலாய்த்து வருகின்றனர். உண்மையாக இருந்தால் மட்டுமே இந்த உலகம் உங்களை நம்பும் என்றும் ஏமாற்றினால் உங்களை கடைசி வரை யாருமே நம்ப மாட்டார்கள். உங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட உங்களை நம்பவே மாட்டார்கள் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
விஷால் பட நடிகை விளாசல்: விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆகான்ஷா புரி இந்த கர்ப்ப புகைப்படங்களை பார்த்து சாவையே ஏமாற்றிய ஆளாச்சே நீ, உன்னை இப்போ நம்பவே மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பூனம் பாண்டேவின் நெருங்கிய தோழி தான் ஆகான்ஷா புரி என்பது குறிப்பிடத்தக்கது. இது ரியலா? அல்லது ஃபேக்கா? என்பது குறித்து சீக்கிரமே ஒரு டிராமாவை பூனம் பாண்டே போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











