கடவுளே என் படம் ஹிட்டாகணும்: கும்பமேளாவில் புனித நீராடிய பூனம் பாண்டே
அலகாபாத்: உத்தர பிரதே மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவுக்கு சென்ற பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவையொட்டி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் துறவிகள், பக்தர்கள் என்று கோடிக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் எடுக்கப்படும் அடல்ட் படத்தில் மாடல் பூனம் பாண்டே நடித்து வருகிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படமாகும். இந்த படத்திற்காக ஒல்லிக்குச்சியாக இருந்த அவர் 6 கிலோ எடை போட்டுள்ளார். இந்நிலையில் அவர் கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடியுள்ளார்.

கடவுளே என் படம் ஹிட்டாகணும்!
புனித நீராடிய பூனம் கண்ணை மூடி கைகளை குவித்த வண்ணம் வைத்து தனது படம் ஹிட்டாக வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்துள்ளார். இதை நாங்கள் சொல்லவில்லை அவர் தான் தெரிவித்துள்ளார்.

யோகிகளிடம் ஆசி...
கும்பமேளாவுக்கு சென்ற பூனம் அங்குள்ள யோகிகளிடம் ஆசி பெற்று வந்துள்ளார்.

எதுக்கெல்லாம் ஆசி வாங்குறது என்றே இல்லையா?
படம் அதுவும் 'ஏ' படம் ஹிட்டாக வேண்டும் என்று ஆசி வாங்கியுள்ளாரே பூனம். எது எதுக்குத் தான் ஆசி வாங்குவது என்று விவஸ்தை இல்லையா?


Click it and Unblock the Notifications











