ஹீரோயின் என்ற பெயரை நம்பி ஏமாந்த கீர்த்தி சுரேஷ்
Recommended Video

சென்னை: சர்கார் படத்தை பார்த்தவர்கள் கீர்த்தியின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டுள்ளனர்.
தீபாவளி ஸ்பெஷலாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்பது உங்களுக்கே தெரியும். நிஜத்தில் அவர் ஹீரோயின் இல்லை கூட்டத்தோடு கூட்டமாக வந்துவிட்டு செல்கிறார்.
அவரின் கதாபாத்திரத்திற்கு வேலையே இல்லை.

ஹீரோயின்
சர்கார் படத்தில் பெயருக்கு தான் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். ஆனால் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளிச் சென்றிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். படத்தில் வரலட்சுமிக்கு தான் வெயிட்டான கதாபாத்திரம். கீர்த்திக்கு பாவம் ஒப்புக்கு சப்பாணி கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டு நீங்க தான் ஹீரோயின் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நடிப்பு
சண்டக்கோழி 2 படத்தை போன்றே சர்கார் படத்திலும் வரலட்சுமி ஸ்கோர் செய்துவிடுவாரோ என்று கீர்த்தி பயந்ததில் தப்பே இல்லை. அவருக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாத போது எங்கிருந்து ஸ்கோர் பண்ணுவார். ஆனால் டூயட் பாடிவிட்டு ஓரமாக இருக்கும் கதாபாத்திரம் என்று தெரிந்து தான் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதால் அவரால் எதுவும் சொல்ல முடியாது.

வில்லி
ஹீரோயின் என்ற அந்த பெயருக்கு ஆசைப்பட்டு நடித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஆனால் வரலட்சுமியோ வில்லி கதாபாத்திரத்தை ஒப்புக் கொண்டு ஹீரோவுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ரசிகர்கள் வரலட்சுமியை வில்லி என்று நினைத்து திட்டாமல் அவரின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர்
வில்லி கதாபாத்திரம் இந்த அளவுக்கு வெயிட்டாக இருக்கும்போது வரலட்சுமிக்கு ஹீரோயின் கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் அவர் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். வரலட்சுமி தெளிவாக உள்ளார். கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின் என்ற அந்த பெயருக்கு ஆசைப்பட்டு முக்கியத்துவம் இல்லா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா வாழ்க்கை
நிலைமை இப்படி மோசமாக இருக்கும்போது கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்துவிட்டு ஓய்வு எடுக்கப் போகிறாராம். அவர் திரும்பி வருவதற்குள் அவர் இடத்தை வேறு யாராவது பிடித்துவிடுவார்கள். இதை கீர்த்தி புரிந்து கொண்டு செயல்பட்டால் நல்லது.


Click it and Unblock the Notifications











