Poor To Kuberaa: ராஷ்மிகா மந்தனா.. பொம்மை வாங்க கூட பணமில்லாத சூழல் டூ ரூபாய் 3000 கோடி வசூல் வரை!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் நடிக்கும் பான் இந்தியா படங்கள் எல்லாம் அசால்ட்டாக ஆயிரம் கோடிகளை பாக்ஸ் ஆபிஸில் அறுவடை செய்கிறது. இவர் சினிமாவில் கால் பதிக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தபோது அவரது உருவத்தைப் பார்த்து பல தயாரிப்பாளர்கள் கேலி கிண்டல் செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்றைக்கு அவரது அடுத்த சில ஆண்டுகளுக்கு கால்ஷீட் அவரிடம் இல்லை எனும் அளவுக்கு பிசியான நடிகையாக பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். இவரது Poor To Kuberaa ஸ்டோரியை இந்த தொகுப்பில் காணலாம்.

ராஷ்மிகா மந்தனாவின் குழந்தைப் பருவம் மிகவும் சவால்கள் நிறைந்த குழந்தைப் பருவம். இவரது குடும்பம் நிலையாக ஒரு வீட்டில் இருந்தது கிடையாது. வாடகை செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து அடிக்கடி அவர்கள் குடும்பமாக வீடு மாறிக்கொண்டே இருந்துள்ளார்கள். இந்த நெருகடியிலும் அவரது பெற்றோர்கள் மந்தனாவின் படிப்பில் அதிக அக்கறை செலுத்தியுள்ளனர். இவர் இதழியல், உளவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் என மூன்றிலும் பட்டம் பெற்றுள்ளார். தனது கல்லூரி பருவத்திலேயே மாடலிங்கைத் தொடங்கிய அவருக்கு அவரது குடும்பத்தினர் சப்போர்ட் செய்துள்ளார்கள்.

Poor To Kubera Actress Rashmika Mandanna Archives Indian Cinemas Who From Poor Background Original
Photo Credit:

இவருக்கும் இவரது தங்கைக்கும் 16 ஆண்டுகள் வித்தியாசம். கிட்டத்தட்ட பள்ளி படிப்பை முடிக்கும் போது அவர் தங்கை பிறந்துள்ளார். ராஷ்மிகா தனது குடும்பச் சூழலை புரிந்து கொண்டு தனது பெற்றோர்களிடம் பொம்மை கூட வாங்கித் தாருங்கள் என்று கேட்கமாட்டாராம். அந்த அளவிற்கு தனது குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் குயின்: இப்படியெல்லாம் வறுமையில் வாடிய ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உயர்ந்து நிற்கிறார். கல்லூரி காலத்தில் அவர் மாடலிங்கில் காட்டிய ஆர்வம் அவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனாவை இணையதளவாசிகளும் அவரது ரசிகர்களும் நேஷ்னல் கிரஷ் என்று அழைக்கிறார்கள். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல், புஷ்பா 2 படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. இதில் அனிமல் 1000 கோடிகளும் புஷ்பா 2 கிட்டத்த 2500 கோடிகளும் வசூலித்தது.

Poor To Kubera Actress Rashmika Mandanna Archives Indian Cinemas Who From Poor Background Original
Photo Credit:

Poor To Kuberaa : ஒரே ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 3500 கோடிகள் வசூல் குவித்த நடிகையாக, பாக்ஸ் ஆஃபிஸ் குயினாக மாறி நிற்கிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள குபேரா படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தென்னிந்தியாவில் படத்திற்கு தமிழ்நாட்டில் தனுஷ், தெலுங்கு சினிமா உலகிற்கு நாகர்ஜுனா என பலர் இருந்தாலும் மொத்த இந்தியாவையும் கவர் செய்யும் பான் இந்தியா ஸ்டாராக இருப்பது நடிகை ராஷ்மிகா மந்தனா மட்டும்தான். ராஷ்மிகா மந்தனா இன்று அடைந்துள்ள உச்சத்தை வந்து அடைவதற்கு முன்னர் எவ்வளவு ஏளனங்களையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டாரோ, இன்றைக்கு அதை விட பல விமர்சனங்களுக்கு ஆளாகிறார். பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, ஆதிக்கம் தலைத்தோங்கும் சினிமா துறையில் ஒற்றைப் பெண்ணாக காலடி எடுத்துவைத்து அதில் அவர் ஏற்படுத்திக் கொண்ட இலக்குகள் ஒவ்வொன்றாக அடைந்து, Poor To Kuberaa என்ற சொற்களுக்கு தகுதியானவராக உயர்ந்து நிற்கிறார். நீங்கள் இன்னும் உயர வாழ்த்துகள் மந்தனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X