நடிகை பூர்ணாவிடம் திருமணம் செய்வதாகப் பழகி, பணம் பறிக்க முயன்ற வழக்கு.. 3 பேருக்கு ஜாமின்!

By

கொச்சி: நடிகை பூர்ணாவிடம் மோசடி செய்ய முயன்ற வழக்கில் மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

Recommended Video

விஷால் உனக்கு நான் வைக்கிறேன் ஆப்பு | MYSKIN ANGRY SPEECH | THUPPARIVAALAN 2 ISSUE | FILMIBEAT TAMIL

தமிழில், வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் உட்பட சில படங்களில் நடித்தவர் பூர்ணா.

இவர் மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது ஒரிஜினல் பெயரில் நடித்து வருகிறார்.

நடிகை பூர்ணா வீடு

நடிகை பூர்ணா வீடு

இவரிடம் கடந்த மாதம், ரபீக் என்பவர் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த மாதம் 3 ஆம் தேதி பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் அவர்களைப் பற்றிய தகவலை முழுமையாகக் கூறவில்லை.

ஒரு லட்சம் ரூபாய்

ஒரு லட்சம் ரூபாய்

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன், பூர்ணாவின் குடும்பத்தினரிடம் பேசிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டனர். ஒரு கட்டத்தில் மிரட்ட ஆரம்பித்தனர். இதையடுத்து பூர்ணாவின் அம்மா போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், அபுபக்கர், ஹாரிஸ் உட்பட சிலரை கைது செய்தனர்.

பல பெண்கள் புகார்

பல பெண்கள் புகார்

நடிகையிடம் திருமணம் செய்வதாகப் பழகி மோசடிக்கு முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதும் மேலும் பல பெண்கள் இந்த கும்பல் மீது புகார் கூறியது. இந்தக் கும்பலிடம் நகைகள், பணத்தைப் பலர் இழந்துள்ளனர். சில பெண்களிடம் பாலியல் அத்துமீறலிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

செசன்ஸ் கோர்ட்

செசன்ஸ் கோர்ட்

இதுதொடர்பாக சினிமா நடிகர் தர்மராஜன், தயாரிப்பாளர் ஒருவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத், அபுபக்கர், ஹாரிஸ் ஆகியோருக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X