நடிகை பூர்ணாவிற்கு 2வது குழந்தை பிறந்தது.. கணவர் நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: 'மஞ்சு போலொரு பெண்குட்டி' என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த நடிகை பூர்ணா. தமிழில் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இணையத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது பூர்ணாவிற்கு இரண்டாவது அழகான குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியான செய்தியை அவரது கணவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை பூர்ணா, ஷாம்னா காஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். மலையாள படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தமிழில், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கொடைக்கானல், கந்தக் கோட்டை, துரோகி, அர்ஜுனன் காதலி, அடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலாகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரகத்தி, அடங்க மறு, இவனுக்கு எங்கேயோ மச்சம், காப்பான், தலைவி ஆகிய படங்களில் நடித்தார்.

நடிகை பூர்ணா: பல படத்தில் பிஸியாக நடித்து வந்த நடிகையாக நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு ஷானித் ஆஸிப் அலி என்ற துபாய் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2023ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும், சினிமாவில் நடிக்க வந்த பூர்ணா தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து வந்தார். நடிகை பூர்ணா இரண்டாவது முறையாக கர்ப்பமான நிலையில், விமர்சையாக வளைகாப்பு நடத்தப்பட்ட போட்டோக்களை இணையத்தில் அவரது கணவர் வெளியிட்டார்.
2வது குழந்தை பிறந்தது: இந்நிலையில், பூர்ணாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராமில் 2வது குழந்தை பிறந்த மிகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'அல்லாஹ்வின் அருளால், இன்று அதிகாலை 4:25 மணிக்கு எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவள் அல்லாஹ்வின் விலைமதிப்பற்ற பரிசு, எங்கள் ஹம்து குட்டியின் அன்பான சகோதரி. இது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். சுகப்பிரசவம் என குறிப்பிட்டு, டாக்டர் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். பலரும் நடிகை பூர்ணாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











