மீண்டும் வரும் பூர்ணா.. மறுபடியும் பேசப்படுவாரா?

By Sudha

சென்னை: பூர்ணா நடித்த படங்களை விட அவரைப் பற்றி வந்த கிசுகிசுக்கள்தான் அதிகம் இருக்கும். கவர்ச்சிகரமான அழகு, ஓரளவு நடிப்பு என எல்லாம் இருந்தும் பெரிய அளவில் பார்க்கப்படாதவர் இந்த பூர்ணா. தற்போது படம் பேசும் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு மூலம் தமிழுக்கு வந்தவர் இந்த கேரளத்து பூர்ணா.

கடைசியாக அவர் தலை காட்டிச் சென்றது வித்தகன், பார்த்திபனுடன். இடையில் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது மீண்டும் படம் பேசும் உள்ளிட்ட சில படங்கள் மூலம் மறுபடியும் தரிசனம் தர வருகிறார்.

எல்லாம் இருந்தும் ஏன்...

எல்லாம் இருந்தும் ஏன்...

பார்க்க ரேவதி போலவே இருக்கிறார் என்று ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டவர் பூர்ணா. அது அவருக்கு பூஸ்ட் கொடுத்தது. ஆனாலும் படங்கள்தான் பெரிய அளவில் இல்லை.

நடிப்போடு கவர்ச்சியும்

நடிப்போடு கவர்ச்சியும்

வெறும் நடிப்பை வைத்துக் கொண்டு கோலிவுட்டில் வெங்காயம் கூட நறுக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு டக்கென்று கவர்ச்சிக்கும் மாறிப் பார்த்தார்.

கலாட்சேபம் செய்ய முடியவில்லையே....

கலாட்சேபம் செய்ய முடியவில்லையே....

ஆனாலும் அவரது கவர்ச்சியும் கூட பெரிதாக பேசப்படவில்லை. என்ன செய்தும், எப்படிச் செய்தும் முன்னணி ஹீரோயினாக முன்னுக்கு வராமலேயே பின்னுக்குப் போனார் பூர்ணா.

அங்குமிங்கும்

அங்குமிங்கும்

இப்படியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு முடித்து விட்டார் பூர்ணா.

தமிழில் 4

தமிழில் 4

தற்போது பூர்ணாவுக்கு தமிழில் மட்டும் நான்கு படங்கள் இருக்கிறதாம். அதில் லேட்டஸ்டாக வந்து சேர்ந்ததுதான் பேசும் படம். சக்தியுடன் ஜோடி போட்டுள்ளார்.

சக்தியுடன் ஜோடி, பூர்ணாவின் கேரியருக்கு சக்தி தருமா... பார்க்கலாம்.!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X