சகோதரிகளின் காதல் கதை.. இந்தி சினிமாவில் அறிமுகமாகும் 'கோலங்கள்' நடிகை.. குவியும் வாழ்த்து!
சென்னை: பிரபல நடிகை நெட்பிளிக்ஸுக்காக உருவாகும் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
பிரபல மலையாள நடிகை பூர்ணிமா. இவர் தமிழில், விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தில் தோழியாக நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இரண்டு மகள்கள்
இவர், நடிகர் பிருத்விராஜின் அண்ணன், இந்திரஜித்தை காதலித்து கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரார்த்தனா, நட்சத்திரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மலையாளத்தில் காட்டன் மேரி, நரனது தம்புரான், ரண்டாம் பாவம், டேனி, குலாபி டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் வைரஸ்
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த இவர், ஆஷிக் அபு இயக்கிய வைரஸ் படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு வந்தார். அடுத்து நிவின் பாலியின் துறைமுகம் படத்திலும் நடித்த இவர். ஃபேஷன் டிசைனரும் கூட. இவர் இப்போது இந்தியில் அறிமுகமாகிறார்.

முன்னாள் காதலர்
அந்த படத்துக்கு கோபால்ட் புளு (Cobalt Blue) என்று டைட்டில் வைத்துள்ளனர். சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். மராத்தியில் இவர், இதே பெயரில் 2006 ஆம் ஆண்டு எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது. இதில் பிரதீக் பப்பர் ஹீரோவாக நடிக்கிறார். இவர், நடிகை எமி ஜாக்சனின் முன்னாள் காதலர்.

பேயிங் கெஸ்ட் காதல்
அஞ்சலி சிவராமன், கீதாஞ்சலி குல்கர்னி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள். அந்த வீட்டுக்கு, பேயிங் கெஸ்ட்டாக வருபவர் மீது இருவருமே காதல் கொள்கின்றன. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. திரைக்கதை வித்தியாசமாக இருக்குமாம்.
Recommended Video

ரசிகர்கள் வாழ்த்து
நெட்பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தயாராகிறது. ஓடிடி தளங்களுக்காக இந்தியில் உருவாகும் படங்களில், தென்னிந்திய நடிகைகளை நடிக்க வைப்பது இப்போது அதிகரித்து வருகிறது. பூர்ணிமா இந்திரஜித் இந்தியில் அறிமுகமாவதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











