»   »  பூர்ணிதாவின் திருவாசகம்!

பூர்ணிதாவின் திருவாசகம்!

Subscribe to Oneindia Tamil

2 பெயர் கிடைக்காத படங்களில் நடித்து நடித்து விட்ட சின்னப் பொண்ணு பூர்ணிதா, அடுத்து திருவாசகம்படத்தில் தலை காட்டுகிறார்.

கல்யாணி என்ற பெயரில் பேபி நடிகையாக அறியப்பட்ட பூர்ணிதா இப்போது ஹீரோயின். இரு படங்களில்நடித்து விட்டார். இரு படமும் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

இந்த நிலையில் 3வதாக ஒரு படம் கிடைத்துள்ளது பூர்ணிதாவுக்கு. திருவாசகம் என பெயர் சூட்டியுள்ளனர்.திருவாசகத்துக்கு உருகாதவர்கள் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று கூறுவர். அதேபோலத்தான் காதலுக்குஉருகாதவர்கள், வேறு எதற்கும் உருக மாட்டார்கள். இதுதான் இப்படத்தின் கதைக் கருவாம்.

இப்படத்தை இயக்கப் போகும் ராஜா மோகன், ஊமைவிழிகள் படத்தின் இயக்குநர் அரவிந்தராஜிடம்உதவியாளராக இருந்தவர். இயக்குநராக அவதாரம் எடுக்க ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தாராம்.அத்தனையும் எனது திருவாசகம் மூலம் பறந்தோடி விடும் என்று பரவசமாக கூறுகிறார்.

படத்துக்கு திருவாசகம் என்று பெயர் வைத்திருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார் ராஜா மோகன். இதுசாதாரண காதல் படம் இல்லை, தெய்வீகக் காதல். அதனால்தான் தெய்வீகப் பெயரான திருவாசகத்தையே எனதுபடத்தின் தலைப்பாக வைத்து விட்டேன் என்கிறார் ராஜா மோகன்.

படத்தில் ஹீரோவாக நடிப்பவர் நவ்தீப். இளவட்டம் படத்தில் ஷீலாவுடன் ஜில்லென நடித்த நவ்தீப், இப்படத்தில்பூர்ணிதாவுக்கு பூ கொடுக்க வருகிறார்.

கும்பகோணத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவராம் நவ்தீப். சென்னையில் பிளஸ்டூ படிக்கும் மாணவியாம்பூர்ணிதா. மகாமக விழாவுக்கு குடந்தைக்கு வரும் பூர்ணிதா, நவ்தீப்பை சந்திக்கிறார்கள். கண்கள் பேசிக் கொள்ள,இதயங்கள் உரசிக் கொள்ள, பிறகென்ன? பிறக்கிறது காதல்!

நவ்தீப்-பூர்ணிதா காதலை கவிதை போல சொல்லப் போகிறாராம் ராஜா மோகன். படத்துக்கு இளமை ததும்பஇசையமைப்பவர் ஜெஸ்ஸி கிப்ட். லஜ்ஜாவதியே பாட்டைப் பாடிய கரகர குரலுக்குச் சொந்தக்காரரான அதேகிப்ட்தான்.

நாலு பாட்டு போட்டிருக்கிறாராம். நாலும் நச் ரக பாட்டுக்களாம். இளைஞர்களை இம்சிக்க வைக்கும் இனியபாடல்களாக வந்துள்ளதாம். பூர்ணிதாவுக்கு அழகான மெலடியும், கிறங்க வைக்கும் கிளாமர் பாட்டும் உண்டாம்.படத்தில் குத்துப் பாட்டை சேர்க்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

திருவாசகம், உருக வைக்குமா?

Read more about: poornitha in tiruvasagam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil