»   »  பூர்ணிதாவின் டீசன்சி!

பூர்ணிதாவின் டீசன்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கூச வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்டாமல், டீசன்ட்டான கிளாமர் காட்டத் தயார் என்கிறார் சின்னப் பொண்ணு பூர்ணிதா.

குட்டிப் பாப்பா கல்யாணிதான் இப்போது பூர்ணிதா. வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டியதும் சட்டுப் புட்டென்று ஹீரோயினாகி இரண்டுபடங்களிலும் நடித்து முடித்து விட்டார்.

அவர் ஹீரோயினாக நடித்த மறந்தேன் மெய்மறந்தேன், ஞாயிறு ஆகிய இரு படங்களும் வந்த வேகத்தில் பொட்டிக்குள் போய் விட்டன. இப்போதுஅடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார் பூர்ணிதா.

ராஜாமோகன் இயக்கத்தில், காதல் காளை நவ்தீப்புக்கு ஜோடியாக திருவாசகம் படத்தில் நடிக்கிறார். இதில் நவ்தீப்புக்கும், பூர்ணிதாவுக்கும் கிளாமர்காட்சிகள் நிறையவாம்.

இதற்காக பூர்ணிதாவையும், நவ்தீப்பையும் வைத்து படு சூடான ஒரு போட்டோ செஷனை எடுத்து முடித்துள்ளார் ராஜா மோகன். பிளஸ்டூமாணவியாக இதில் நடிக்கிறார் பூர்ணிதா.

தமிழிலேயே இன்னும் இடம் உறுதியாகாத நிலையில் தெலுங்குப் பக்கமும் தலையைக் காட்டவுள்ளார் பூர்ணிதா. கேமராமேன் அசோக்குமார்தெலுங்கில் இயக்கும் மஞ்சுகுரசி வேலலோ என்ற படத்தில் பூர்ணிதா நடிக்கிறாராம்.

அதுக்குள்ள அடுத்த மொழிப் படமா என்று பூர்ணிதாவிடம் ஆச்சரியப்பட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. அசோக் குமார் சார் படம் என்பதால்ஒத்துக் கொண்டேன். ஏற்கனவே அவரது இயக்கத்தில் பேக் வாட்டர்ஸ் என்ற ஆங்கிலப்படத்தில் நடித்துள்ளேன்.

இப்போது தெலுங்கில் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்தில் எனக்கு இரட்டை வேடம். அசத்தலாக நடிக்கவுள்ளேன். வழக்கமான இரட்டைவேடப் படம் போல இல்லாமல் இது சற்றே வித்தியாசமாக இருக்கும். எனக்கு நல்ல கேரக்டர் என்று ஆர்வமாக அடுக்கினார்.

கிளாமரில் எப்படி கில்லியா, இல்லை?? என்று ரசிகர்களுக்காக ஒரு கேள்வியைக் கேட்டோம். ஹோம்லியாகவும் நடிப்பேன், கிளாமராகவும்நடிப்பேன். இரண்டுக்குமே முக்கியத்துவம் உண்டு.

கிளாமர் என்றால் அது கூச வைக்கும் அளவுக்கு வல்கராக இருக்கக் கூடாது. அதுக்கு நான் ஆள் இல்லை. பார்ப்பதற்கு டீசன்ட்டாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கவர்ச்சிக்கு நான் ரெடிதான்.

பூர்ணிதா வல்கராக நடிக்க மாட்டா, அதை எழுதி வேண்டுமானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று கியாரண்டியும் கொடுத்து கை குலுக்கிஅனுப்பி வைத்தார்.

நல்லா பேச கத்துக்கிட்டாங்கோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil