முதல் கணவருடன் டைவர்ஸ்.. இரண்டாவது கணவர் மரணம்.. பூவே உனக்காக நடிகைக்கு இவ்வளவு சோகமா?

சென்னை: விஜய் கரியரில் அவருக்கு முதல் ஹிட் படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம்தான். விக்ரமன் இயக்கியிருந்த அப்படத்தில்தான் நடிகை அஞ்சு அரவிந்த்தும் தமிழில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் அப்படத்துக்கு பிறகு தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்த அவர் ஒருகட்டத்தில் கோலிவுட்டிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார் விஜய். இவ்வளவு பெரிய உயரத்துக்கு அவர் இப்போது வந்திருந்தாலும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த முதல் படம் என்றால் அது பூவே உனக்காக. விக்ரமன் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்படத்தில்தான் நடிகை அஞ்சு அரவிந்த்தும் தனது கோலிவுட் திரைப்பயணத்தை தொடங்கினார்.

அஞ்சு அரவிந்த்: மலையாள திரையுலகத்தில் 1995ல் வெளியான அக்‌ஷரம் என்ற படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். பூவே உனக்காக படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த அவருக்கு முதல் படமே மெகா ஹிட்டானதால் தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அந்தவகையில் அருணாச்சலம், ஒன்ஸ்மோர் என பல படங்களில் நடித்தார் அவர்.

Poove Unakaga Fame Anju Aravind Shares her Personal Life
Photo Credit:

மலையாளத்தில்தான் கவனம்: தமிழ் சினிமாவில் அவருக்கு வரவேற்பு கிடைத்திருந்தாலும் அவரது கவனம் பெரும்பாலும் மலையாள சினிமாவில்தான் இருந்தது. தமிழை விடவும் அங்கு படு பிஸியாக நடித்தார். பம்பரம் சுற்றி சுழன்று நடித்துக்கொண்டிருந்த அவர் 2001ஆம் ஆண்டு வெளியான கண்ணா உன்னை தேடுகிறேன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு ஒட்டுமொத்தமாக கோலிவுட்டிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

சினிமாவுக்கு பை பை: அதேசமயம் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் கொட்டி குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்தி மிகப்பெரிய ரவுண்டு வந்த அவர் அதே மொழியில் வெளியான டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மொத்தம் மூன்று சீரியல்களில் நடித்திருக்கும் அவர்; இப்போது கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில் தன்னுடைய பெர்சனல் பக்கங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அஞ்சு அரவிந்த் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஆசை தம்பி படத்தில் நடித்தபோது எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. திருமணத்துக்கு பிறகும் நான் படங்களில் நடித்துவந்தேன். வாஞ்சிநாதன் படமெல்லாம் திருமணம் செய்த பிறகு நடித்ததுதான். முதல் திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இரண்டாவது திருமணம் செய்தேன். கணவர் உயிரிழந்துவிட்டார். இப்போது நான் சஞ்சய் என்ற எனது பள்ளி கால தோழருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்.அவர் ஐடி வேலை செய்துகொண்டே சமூக சேவையையும் செய்பவர்.

5 வருடங்கள்: நாங்கள் ஐந்து வருடங்களாக சேர்ந்து வாழ்கிறோம். எனது மகள் விஜய்யின் தீவிர ரசிகை. ஒருமுறை அவரை சந்திக்க ட்ரை செய்தோம். நாங்கள் கொடுத்த மெசேஜ் அவருக்கு சரியாக போகவில்லை என்பதால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. எனக்கு ஒரு மகள்தான். ஆனால் யூடியூபில் மூன்று மகள்கள் என்று சொல்கிறார்கள். அதனை கேட்டு சஞ்சய்யும் சிரித்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X