பூவே உனக்காக சங்கீதா.. 25 வருஷம் கழித்து சின்ன தளபதி படத்துல கம்பேக் கொடுக்கிறார்.. அட்ராசக்க!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் மலையாளத்தில் நடித்து வரும் இவர், 25 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளார்.

1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சினேகிகன் ஒரு பெண்ணு' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை சங்கீதா. ஏன் ரத்தத்தின் ரத்தமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

Poove Unakaga fame Sangita Madhavan Nair return to Tamil Cinema after 25 years with Kaalidass 2

ராவணன், மகாநதி, சீதனம், நம்ம ஊரு ராசா, அம்மன் கோவில் வாசலிலே, காலம் மாறி போச்சு, அலெக்சாண்டர், வள்ளல், கங்கா கௌரி, பொங்கலோ பொங்கல், கும்பகோணம் கோபாலு, எதிரும் புதிரும், பூ மனமே வா, ஜெயம், கண் திறந்து பாரம்மா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன் பூவே உனக்காக: நடிகை சங்கீதா பல படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு முதன்முதலாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த பூவே உனக்காக படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் அப்படியே இருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா கம்பேக் கொடுக்க உள்ளார்.

சங்கீதாவின் கணவர் யார் தெரியுமா?: கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்தான் சங்கீதா சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் இவர் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் சரவணனை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகினார். சிம்புவின் சிலம்பாட்டம் படத்தை இயக்கியவர் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சினிமாவில்: திருமணத்துக்குப் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நகர வருதி நடுவில் நியான் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு சாவித் எனும் மலையாள படத்தில் நடித்த அவர் கடந்த ஆண்டு வெளியான பராக்கிரமம், ஆனந்த் ஸ்ரீ பாலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காளிதாஸ் 2: சின்ன தளபதியான ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் பரத் நடிப்பில் உருவாக உள்ள காளிதாஸ் 2 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்க காத்திருக்கிறார் நடிகை சங்கீதா. 47 வயதிலும் இன்னமும் அழகு குறையாமல் அதே போன்ற தோற்றத்துடன் அவர் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. பரத்துக்கு கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் திரைப்படம் வெற்றி படமாக மாறியது. அதன் பின்னர் அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், மீண்டும் காளிதாஸ் 2 பக்கம் திரும்பி இருக்கிறார். ஸ்ரீ செந்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஹீரோயினாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X