அத போட்டா சொர்க்கத்துக்கு பக்கத்துலயே போகலாம்... பிரபல நடிகையின் அடிபொலி !

சென்னை : வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை கேத்ரின் தெரசா.

தமிழில் அருவம் திரைப்படத்தில் நடித்தவருக்கு அதன்பின் எந்த ஒரு படமும் ஒப்பந்தமாகவில்லை.

இதனையடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைஹீல்ஸ் அணிந்தால் சொர்க்கத்துக்கு அருகே சென்றது போலவே இருக்கிறது என அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டு பட்டையை கிளப்பி வருகிறார்.

தொடர் வெற்றிகளை

தொடர் வெற்றிகளை

ஆரம்பமே அதிரடியாக பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகத்தை கொடுத்த நடிகை கேத்ரின் தெரசா தொடர்ந்து அனைவராலும் கவனிக்கப்படும் மிக முக்கிய நடிகையாக மாறினார். மெட்ராஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதன்பிறகு நடித்த கதகளி,கணிதன் என அடுத்தடுத்த படங்களும் தொடர் வெற்றிகளை பெற்றுத்தந்தது.

தோல்வியை தழுவியது

தோல்வியை தழுவியது

நடிப்பு மட்டுமல்லாமல் கதைக்கு தகுந்தாற்போல் கவர்ச்சியிலும் கேத்ரின் தெரசா படு தாராளம் காட்டி வர சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வந்தாராஜாவாதான்வருவேன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் பிரபலமாக உள்ளதால் அவரது படங்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி படத்தின் சாயலிலேயே உருவான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

பூஜையுடன் தொடங்கியது

பூஜையுடன் தொடங்கியது

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை கேத்ரின் தற்போது ஸ்ரீ விஷ்ணு நடிக்கும் பால தண்டணனா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இது ஒரு காதல் மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாகும்.

அப்டிகா இப்டிகா

அப்டிகா இப்டிகா

தமிழில் சரியான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் கேத்ரின் தெரசா இப்பொழுது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் காஸ்ட்யூமில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு அப்டிகா இப்டிகா என வளர்சி வளர்சி செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு " உங்களுக்கு தெரியுமா அவர்கள் என்ன சொன்னார்கள் என்று.. ஹைஹீல்ஸ் சொர்க்கத்துக்கு அருகே கொண்டு சென்றது போலவே இருக்கும் " என்று. பதிவிட்டுள்ளதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X