அட்டகாசமாக சீரியல் என்ட்ரி கொடுத்த நமீதா… எந்த சீரியல் தெரியுமா ?

சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் சீரியலில் நமீதா சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு இத்தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், தேவ்யானி, அபிஷேக், திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

நடிகை நமீதா விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து, மகா நடிகன், இங்கிலீஸ்காரன், அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

திருமணம்

திருமணம்

கவர்ச்சிப்புயலாக பலத்திரைப்படத்தில் நடித்த நமீதா, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பட வாய்ப்புகள் இல்லாததால் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். நமிதா தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கி உள்ளார். இந்த ஒடிடி தளத்தில் நமீதாவின் நண்பர் ரவி வர்மா பார்ட்னராகவும், நமீதா நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்.

நமீதா திடீர் என்ட்ரி

நமீதா திடீர் என்ட்ரி

இந்நிலையில் நடிகை நமீதா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார். காரில் வரும் நமீதா, சாலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை பார்த்து ஆதங்கப்படுகிறார். கழிவுநீர் கால்வாய் இப்படி திறந்து கிடந்தால் ஆபத்து, குழந்தைகள் யாராவது விழுந்துவிடுவார்கள் என்று, அதை மூடகாரிலிருந்து இறங்கும் போது, அந்த வழியாக வந்த தேவயானியின் மருமகள் அந்த கழிவு நீர் கால்வாயை மூடுகிறாள். இதைப்பார்த்த நமீதா, அவரை மனம் திறந்து பாராட்டுகிறார். ஜீ தொலைக்காட்சியில் இந்த ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

புதுபுது அர்த்தங்கள்

புதுபுது அர்த்தங்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் புதுபுது அர்த்தங்கள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மாமியார் - மருமகள் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் 100வது எபிசோடை எட்டியுள்ளது. இந்த சீரியலில் லட்சுமி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

திண்டுக்கல் லியோனி

திண்டுக்கல் லியோனி

அரசியல் பிரபலமான 'திண்டுக்கல் லியோனி லட்சுமியின் மாமனார் திருவேங்கடமாகவும், லட்சுமியின் காதலன் மற்றும் சமையல் கலை நிபுணராக அபிஷேக் சங்கர் , லட்சுமியின் மருமகள் பவித்ராவாக வி.ஜே பார்வதி, லட்சுமியின் மகன் சந்தோஷ் கதாப்பாத்திரத்தில் நியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கணவனை இழந்த லட்சுமி, மகன் சந்தோஷையும், மாமனார் திருவேங்கடத்தையும் ஒற்றை ஆளாக கவனித்து வருகிறார்.இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

குஷ்பு மங்களமாக

குஷ்பு மங்களமாக

இதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' நாடகத்தில் 'மங்களம்' என்ற கதாப்பாத்திரத்தில் குஷ்பு திடீரென தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த தொடரில், மருத்துவரான மங்களம், பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X