நடிகை ரெஜினா கசாண்ட்ரா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா நம்ப முடியலையே!
சென்னை: பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரெஜினா, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா, ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா: பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த ரெஜினா கசாண்ட்ரா, அதன் பின் பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருந்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா இந்த படத்திற்கு பின் இவர் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார்.
விடாமுயற்சி படத்தில்: தற்போது தமிழ், தெலுங்கு,கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், ரெஜினா தனது அஜர்பைஜானில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, விடாமுயற்சி படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

கைவசம் உள்ள படம்: கதாநாயகி, வில்லி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டும் ரெஜினா, வித்தியாசமான கதைகளில் நடிப்பதையே பெரிதும் விரும்பக்கூடிய நடிகையாக இருக்கிறார். தற்போது, ரெஜினா கசாண்ட்ராவின் கைவசம், சூர்ப்பனகை , பிளாஷ்பேக், பார்டர், செக்ஸன் 108 ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

சொத்துமதிப்பு: இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ராக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கணிசமான படங்களில் நடித்து வரும் ரெஜினா ஒரு படத்திற்கு 80 லட்சத்தை சம்பளமாக வாங்குகிறார். ரேஞ்ச் ரோவர், எவோக், மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்களை வைத்து இவருக்கு 6 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











