For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விபச்சார வழக்குகளில் பிரபல நடிகைகள் - நிஜமா... ட்ராமாவா?

  By Shankar
  |

  தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகைகள் கூட, திடீரென்று ஒரு நாள் விபச்சார வழக்கில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள்.

  இந்த வழக்குகள் அவர்கள் மீது திடீரென பாய்ந்ததற்கு பெரிய பின்னணிகள் உண்டு. ஒன்று ஆளும் வர்க்கத்துக்கு அவர்கள் அடங்கி நடக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது போலீசார் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  வெளியில் தெரிந்து சில நடிகைகள்தான் இந்த மாதிரி வழக்கில் சிக்கியிருப்பார்கள். சில டாப் நடிகைகளை கையும் களவுமாகப் பிடித்தும், சில் அட்ஜஸ்ட்மென்ட்கள் காரணமாக கடைசிநேரத்தில் விட்டுவிட்ட தகவல்களும் வெளி வந்திருக்கின்றன.

  ஆனால் கடைசி வரையில் எந்த நடிகையும் தண்டனை பெற்றதாக மட்டும் செய்தியே வருவதில்லை... ஏன்?

  மாதுரி

  மாதுரி

  ரஜினி, விஜய்காந்த் என டாப் நடிகர்களுடன் நடித்தவர் மாதுரி. கடைசியில் இவர் ஒரு மாதிரி என பெயர் கெட ஆரம்பித்தது சினிமா உலகில். நடிப்புடன் சைடில் துணிக்கடை வைத்து நடத்தி வந்தவரை, ஒரு நாள் விபச்சார வழக்கில் கைது செய்தனர் போலீசார். அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தவர், சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். சில ஆந்திரப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் நடத்தியதாகவும் குற்றம்சாட்டினர் போலீசார்.

  வினிதா

  வினிதா

  சரத்குமார், பிரபு, கார்த்திக் என தொன்னூறுகளில் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் வினிதா. விபச்சாரத் தடுப்புப் போலீசார் விரித்த வலையில் சிக்கி, பலான தொழில் நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர்.

  ப்ளோரா

  ப்ளோரா

  விஜயகாந்த் ஜோடியாக கஜேந்திரா படத்தில் அறிமுகமாகி, குஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் ப்ளோரா என்கிற ஆஷா ஷைனி. இவர் சிக்கியது விபச்சார வழக்கில் அல்ல. அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறையையில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதனால் தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட்டு பின் மன்னிக்கப்பட்டார். ப்ளோரா இப்போதும் தெலுங்கு - தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவரது மாடலிங் படங்கள் என்ற பெயரில் முக்கால் மற்றும் முழு நிர்வாணப் படங்கள் இணையங்களில் உலா வந்து கொண்டுதான் உள்ளன.

  புவனேஸ்வரி

  புவனேஸ்வரி

  இவரது கைதுதான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது. இவரையும் விபச்சார வழக்கில் பொறி வைத்துதான் பிடித்தனர் போலீசார். இவருடன் மேலும் இரு 'அழகிகளும்' கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புவனேஸ்வரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தை பத்திரிகை வெளியிடப் போக, அது பெரும் பிரச்சினை ஆனது.

  சிறையிலிருந்து வெளியில் வந்த புவனேஸ்வரி, ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகக் கூட ஆனார். வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

  தேவிப்ரியா

  தேவிப்ரியா

  பிரபல சீரியல் வில்லியான இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மகா மோசமானவை. ஆனால் வழக்கு என்னானது என்று தெரியவில்லை... இவரோ இன்னும் பிஸியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

  பத்மா நாராயனன்

  பத்மா நாராயனன்

  டி ராஜேந்தரின் வீராச்சாமி பட நடிகை. பரங்கிமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். இவரும் ஒரு ஆந்திர தொழிலதிபரும் இருந்த நிர்வாண வீடியோக்களை வைத்து, பணம் பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டு. வழக்கு இன்னும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவரோ பெயரை மாற்றிக் கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். காஞ்சனா படத்தில் வரும் அந்த எம்எல்ஏ வைப்பு இவர்தான்!

  கண்ணழகி, சிரிப்பழகி...

  கண்ணழகி, சிரிப்பழகி...

  இவர்களைப்போல இன்னும் சிலர் மட்டும்தான் வழக்கு, விசாரணை என சிக்கி, பெயரையும் கெடுத்துக் கொண்டார்கள். ஆனால் கண்ணழகி, முன்-பின்னழகிகள், சிரிப்பழகி, கவர்ச்சிக் குண்டுகள் என அடை மொழி வெளிச்சங்களில் உலா வந்த பலர், அவ்வப்போது போலீசாரிடம் ஏதாவது ஒரு நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது கடற்கரையோர பங்களாக்களில் சிக்குவதும், சில பல அட்ஜெஸ்ட்மென்டுகளுக்குப் பிறகு சத்தமின்றி வீடு திரும்பியதும் கூட செய்திகளாக வந்துள்ளன. இவற்றின் உண்மைத்தன்மைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதும் உண்மையே.

  வழக்குகள் என்னாகின..?

  வழக்குகள் என்னாகின..?

  இதுவரை விபச்சார வழக்குகளில் கைதான எந்த நடிகையாவது இறுதியில் தண்டிக்கப்பட்டுள்ளாரா என்றால்.. நினைவு தெரிந்து யாருமில்லை. கைது செய்யப்படும்போது கிளம்பும் பரபரப்பு, கொஞ்சநாளில் வழக்கு நடக்கும்போது நீர்த்துப் போய், கொஞ்ச நாளில் மக்களுக்கு மறந்தே போகிறது, அவர்கள் நடித்த சினிமாவைப் போல.

  கடைசி வரை தண்டனையே கிடைக்காத இந்த மாதிரி வழக்குகளுக்காக செலவழிக்கப்படுவதென்னவோ மக்களின் பல கோடி ரூபாய் பணம்தான். எதற்காக 'பொறி' வைத்துப் பிடிக்க வேண்டும்.... பின்னர் அவர்களே வழக்கை நீர்த்துப் போகச் செய்து விடுவிக்க வேண்டும்..

  இது சினிமாவை மிஞ்சிய ஒலக நடிப்பாக இல்லை?!

  English summary
  There are many actresses were arrested under prostitution case, but never punished under the same.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X