ஹீரோயினாக அறிமுகமாகும் அரபிக்குத்து பாடகி… ஹீரோ யார் தெரியுமா ?

சென்னை : அரபிக்குத்து பாடலை பாடிய ஜோனிட்டா காந்தி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரபிக்குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து ஜோனிட்டா காந்தி பாடி உள்ளார். இந்த லிரிக் வீடியோவில் பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கிளாசாக உள்ளார் ஜோனிட்டா.

இந்த வீடியோவை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு என்று கேட்டு வருகின்றனர்.

பீஸ்ட்

பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை, டெல்லி என பிரமாண்ட செட்களில் படமாக்கப்பட்டது.

ஹலமதி ஹபிபோ....

ஹலமதி ஹபிபோ....

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, பீஸ்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் அரபிக்குத்து பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப்பில் டிரெண்டானது. யாரை பார்த்தாலும் ஹலமதி ஹபிபோ.... ஹலமதி ஹபிபோ....என முனுமுனுத்துக்கொண்டு இருக்கின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் அரபிக்குத்துக்கு ஆட்டமாடிய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

ஜோனிட்டா காந்தி

ஜோனிட்டா காந்தி

இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடிய ஜோனிட்டா காந்தி, புது டெல்லியில் பிறந்து பின் கனடாவில் செட்டிலானார். இவரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதே ஜோடி அரபிக்குத்து பாடலிலும் இணைந்துள்ளனர்.

Recommended Video

அரபிக்குத்துக்கு எப்படி ஆடனும் தெரியுமா... கடலையே சூடாக்கிய பீஸ்ட் நாயகி
கதாநாயகியாக

கதாநாயகியாக

இந்நிலையில், பாடகியாக வலம் வரும் ஜோனிட்டா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாக அறிமுமாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X