அதெல்லாம் இப்ப இல்லை.. விவாகரத்துக்குப் பிறகு அதிரடியாக களமிறங்கும் சந்தானம் பட ஹீரோயின்!

By

சென்னை: விவாகரத்துக்குப் பிறகு படங்களில், அதிக கவனம் செலுத்தி வருவதாக சந்தானம் பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில், நடிகைகளுக்குத் திருமணமாகி விட்டால், அவர்களை கண்டுகொள்ளாத போக்கு இருந்து வந்தது.

அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடிக்க வைப்பதையே இயக்குனர்கள் விரும்பினார்கள். இப்போது அந்த போக்கு மாறி இருக்கிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இதற்கு நடிகை சமந்தா உட்பட சில நடிகைகளை உதாரணமாகச் சொல்லலாம். திருமணத்துக்குப் பிறகும் பாலிவுட்டை போல நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்கள் சில படங்களில் வழங்கப்பட்டு வருகிறது. முழுவதுமாக அப்படி இல்லை என்றாலும் மாற்றம் நடந்து கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது.

ஷிரிதா சிவதாஸ்

ஷிரிதா சிவதாஸ்

இந்நிலையில், இந்த மாற்றத்தை வரவேற்பதாகக் கூறியுள்ள சந்தானம் பட ஹீரோயின் ஷிரிதா சிவதாஸ், தமிழ், மலையாளத்தில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். மலையாளத்தில், குஞ்சாக்கோ போபன், பிஜூமேனன் நடித்த ஆர்டினரி படம் மூலம் அறிமுகமான ஷிரிதா தொடர்ந்து மணிபேக் பாலிசி, ஹேங் ஓவர், கூதரா உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

தில்லுக்குத் துட்டு 2

தில்லுக்குத் துட்டு 2

தமிழில் சந்தானம் ஹீரோவாக நடித்த தில்லுக்குத் துட்டு 2 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ராம்பாலா இயக்கி இருந்த இந்தப் படத்தில், நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, பிபின், தீப்தி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அடுத்து ரம்யா நம்பீசன் இயக்கிய அன்ஹைட் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார் ஷிரிதா சிவதாஸ்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், துபாயில் பணியாற்றிய தனது காதலரும் சினிமா பாடகருமான தீபக் நம்பியாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார் ஷிரிதா. இதற்கு சரி செய்ய முடியாத கருத்துவேறுபாடுகள் காரணம் என்று கூறியிருந்தார்.

குறைந்து வருகிறது

குறைந்து வருகிறது

இப்போது மீண்டும் படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தும் ஷிரிதா, 'திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து வெளியேறும் நடிகைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொழிலும் தனிப்பட்ட விஷயங்களும் வேறு வேறு என்பதை சிலர் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். திருமணமோ, விவாகரத்தோ அதை தொழிலுக்குள் கலக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்' என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X