அமலா பாலை பார்த்து கத்துக்கோங்க.. கர்ப்பிணி தீபிகா படுகோனை திட்டும் பிரபாஸ் ஃபேன்ஸ்.. ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி படத்தை நடிகை தீபிகா படுகோன் கண்டுகொள்ளவே இல்லை என பிரபாஸ் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜூன் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் அந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் புஜ்ஜி கார் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது.

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோன் அந்த புரமோஷனுக்கு வரவில்லை. ஆனால், பிரபாஸ் ரசிகர்கள் அவரை திட்டுவதற்கு அது மட்டுமே காரணமில்லை என்றும் சோசியல் மீடியாவில் கூட கல்கி படத்தை தீபிகா படுகோன் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரம்மாண்ட படங்களின் நாயகன்: ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்னும் படம் வந்ததிலிருந்து பிரம்மாண்ட படங்களின் நாயகனாகவே மாறிவிட்டார் பிரபாஸ். பாகுபலி முதல் மற்றும் இரண்டு என இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாலிவுட் இயக்குனர்கள் முதல் கோலிவுட் இயக்குநர்கள் வரை பிரபாஸை இயக்க போட்டி போட்டு வருகின்றனர். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் மற்றும் சலார் உள்ளிட்ட படங்கள் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ளன. இதில் கடந்த ஆண்டு வெளியான சலாத் திரைப்படம் மட்டுமே அவருக்கு வெற்றிப் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
கல்கி 2898 ஏடி: மகாநடி என தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கையை படமாக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை தற்போது பிரபாஸ் மற்றும் படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

கண்டுக்காத தீபிகா: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார். அதனை காரணம் காட்டி பிரபாஸின் கல்கி படத்தின் புரமோஷனை புறக்கணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரில் வரவில்லை என்றாலும் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவது புரோமோஷன் செய்யலாமே அதையும் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

திட்டும் ரசிகர்கள்: கல்கி படத்தை கண்டு கொள்ளாமல் புதிதாக தனது அழகு சாதன பொருட்களுக்கான விளம்பர வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா படுகோன் வெளியிட்டுள்ள நிலையில், இதற்கெல்லாம் நேரம் உள்ளது. ஆனா பிரபாஸ் படம் குறித்து ஒரு ட்வீட் போட கூட நேரமில்லையா? என தீபிகா படுகோனை பிரபாஸ் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். நடிகை அமலா பால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் ஆடு ஜீவிதம் படத்தின் புரமோஷனுக்கு வந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதையெல்லாம் குறிப்பிட்டு ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
ஆலியா பட் போல?: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட்டை டம்மி ஆக்கியது போல இந்த படத்தில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தை டம்மி ஆக்கிவிட்டு திஷா பதானி மற்றும் கீர்த்தி சுரேஷ்க்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டாரா இயககுநர் என்றும் அந்த காண்டுல தான் தீபிகா படும் கல்கி படத்தை கழட்டி விட்டு விட்டாரா என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











