என் கேரக்டருக்கு அழுத்தம் இல்லை... அதனால நோ சொல்லிட்டேன்... த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறிய நடிகை

By

சென்னை: மோகன்லால், த்ரிஷா நடிக்கும் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் பிராச்சி தெஹ்லான்.

இயக்குனர் ஜீத்து ஜோசப், மலையாளத்தில் இயக்கிய த்ரிஷியம் படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தை, கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப்பே இயக்கினார்.

இது தமிழிலும் ஹிட்டானது. பின்னர் மலையாளத்தில் சில படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தம்பி படத்தை இயக்கினார். இதில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பை பெற்றது.

ஆக்‌ஷன் த்ரில்லர்

ஆக்‌ஷன் த்ரில்லர்

இதற்கிடையே அவர் மோகன்லால் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஜீத்து ஜோசப். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட படமான இதற்கு, ராம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் ஷூட்டிங் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது.

மாமாங்கம் ஹீரோயின்

மாமாங்கம் ஹீரோயின்

இதில் மோகன்லால் மனைவியாக, த்ரிஷா நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக,
மம்மூட்டியின் மாமாங்கம் படத்தில் நடித்த பிராச்சி தெஹ்லான் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இவர் வலைப்பந்து மற்றும் பேஸ்கட்பால் வீராங்கனையும் கூட. இந்திய வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன்.

Recommended Video

படத்துக்காக 8 கிலோ கூட்டினேன்|MAMANGAM HEROINE PRACHI TEHLA INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL
நடிக்கவில்லை

நடிக்கவில்லை

அவரும் மோகன்லாலும் இணைந்திருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் பிராச்சி.

முக்கியத்துவம் இல்லை

முக்கியத்துவம் இல்லை

அவர் கூறும்போது, 'இதில் நடிக்க என்னைக் கேட்டார்கள். நான் கதையையும் என் கேரக்டரையும் கேட்டேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் நடிக்கவில்லை. இயக்குனர் கதை சொல்லும்போது, மோகன்லால் அங்கு இருந்தார். மாமாங்கம் படத்தில் என் நடிப்பை பாராட்டினார். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

தமிழில் நடிக்கிறேன்

தமிழில் நடிக்கிறேன்

அடுத்து நான் நடித்துள்ள தெலுங்கு படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழில் சில படங்களில் நடிக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X