'அந்த இருளில் அவள் தன்னை..' அப்படியொரு கேப்ஷனுடன் பிரபல நடிகையின் கருப்பு வெள்ளை போட்டோ!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை கலர் புகைப்படங்களை நெட்டிசன்ஸ் அப்படி வர்ணித்துள்ளனர்.
நடிகைகளின் பெஸ்ட் பிரண்டாகி இருக்கிறது, இன்ஸ்டாகிராம். விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் ஹீரோயின்ஸ்.
படங்களில் நடிக்கிறார்களோ, இல்லையோ, இந்த ஸ்டில்கள்களில் நன்றாக நடிக்கிறார்கள்.

ஹாய் என்பது
அவர்கள் சில போஸ்கள், ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கின்றன. அத்தனை கிளாமர். கேட்டால், கிளாமருக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பார்கள். இன்ஸ்டாவை திறந்தால், நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்கள் முன் வந்து ஹாய் என்பது இவர்களின் புகைப்படங்கள்தான்.

சாதித்ததாக நினைப்பு
ரசிகர்களும் ஆஹா என்று லைக்ஸ்களை குவிக்கிறார்கள். மானே தேனே, உங்களை விட்டா உலகத்துல யாருமே அழகில்லை என்பது போல இஷ்டத்துக்கு கமென்ட் எழுதி, சாதித்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே.. இந்த லைக்ஸ் மற்றும் கமென்ட்களை அப்படி ரசிக்கிறார்கள், நடிகைகள்.

ஸ்டாக் தீர்ந்தால்
இதற்காகவே தினமும் காலை மாலை என புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஸ்பெஷல் போட்டோஷூட்டும் நடத்துகிறார்கள், லட்சங்களைச் செலவழித்து. ஸ்டாக் தீர்ந்துவிட்டால், பழைய புகைப்படங்களை பதிவிட்டு த்ரோபேக் என்கிறாகள்.

நடிகை பிரக்யா
அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழில், விரட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்துள்ள சில படங்கள் தமிழ், மலையாள மொழிகளிலும் டப் ஆகியுள்ளன. இந்தியிலும் நடித்துள்ளார்.

கருப்பு வெள்ளை கலர்
பெரிய ஹிட் கொடுக்காததால் அதிக வாய்ப்புகள் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலாயின. இப்போதும் அதுபோல கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். கருப்பு வெள்ளை மற்றும் கலரிலும் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸுக்கும் ஏராளமான ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளனர்.

வழக்கம் போல
இதற்கு கேப்ஷனாக, அந்த இருளில் அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தாள். ஆனால், அவர் நட்சத்திரங்களுடன் திரும்பினாள் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை சிலர் பாராட்டியுள்ளனர். பல நெட்டிசன்ஸ் வழக்கம் போல அவர் அழகை, ஸ்டன்னிங், செம என்று வர்ணித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











