செல்ல மகள்களின் பிறந்த நாள்.. தடபுடலாக கொண்டாடிய பிரஜின், சாண்ட்ரா!

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகரான பிரஜின் மற்றும் அவரது மனைவி சான்ட்ரா இருவரும் ஜோடியாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் அதிகம் தேடப்படும் நபராக இருவரும் மாறி இருக்கும் இவர்கள். தற்போது பிரஜின் தங்கள் மகள்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

சன்மியூசிக் சேனலில் முதல் ஆண் தொகுப்பாளராக வந்து 90ஸ் பெண்களின் நெஞ்சை கொள்ளை கொண்டவராக இருந்தார் பிரஜின். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை அடுத்து, விஜய் டிவியில் 'ஒரு காதல் கதையில்' நடித்து வந்த போது தான், தொகுப்பாளியான சாண்ட்ரா மீது காதல் வர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பிரஜின் சின்னத்திரையில் தொடர்ந்துப் பணியாற்றி வந்தார். இதையடுத்து, நடிகர் ஜீவா நடித்த டிஷ்யூம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின் 'சா பூ த்ரி', தி த்ரில்லர், டோரன்மெண்ட் போன்ற திரைப்படத்தில் நடித்தார்.

Prajin sandra Birthday

நடிகர் பிரஜின்: சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், மீண்டும் சின்னத்திரைக்கு வந்து சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அன்புடன் குஷி போன்ற சீரியல்களில் நடித்து தனி இடத்தை பிடித்தார். இதையடுத்து, பிக் பாஸ்சீசன் 9ல் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜினி, சான்ட்ரா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதில் பிரஜின் 21 நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனால், சான்ட்ரா 100 நாள்கள் வரை இருந்தார்.

Prajin sandra Birthday

7வது பிறந்தநாள்: பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு பின் சமூக வலைத்தளத்தில் இவர்கள் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் செல்ல மகள்களான பாத்து மற்றும் மீனு குட்டியின் 7வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோவை நடிகர் பிரஜின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் குட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரஜின் "ஊருக்கு ரெண்டு ஊதாரி" கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் ஜனனி ஆகியோர் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X