»   »  பிளஸ் 2 பாஸான பிரணதி

பிளஸ் 2 பாஸான பிரணதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடித்துக் கொண்டே படித்த நடிகை பிரணதி, பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று "சாதனை படைத்துள்ளார்.

கம்பீரம் படத்தில் சரத்குமாரின் ஜோடியாக நடித்தவர் நடிகை பிரணதி. குருதேவா என்ற படத்தில் ஜெய் ஆகாஷுடனும் இவர்கதாநாயகியாக நடித்துள்ளார். இது தவிர தற்போது காற்றுள்ள வரை என்ற படத்திலும், சில தெலுங்கு மற்றும் கன்னடபடங்களிலும் பிரணதி நடித்து வருகிறார்.

அத்தோடு ஜெய் ஆகாஷை காதலித்தும் வருகிறார்.

நடிப்புக்காக படிப்பை பாதியில் விடும் நடிகைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பிரணதிக்கு படிப்பை விட மனமில்லை.பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த போது தான் இவர் சினிமாவுக்குள் நுழைந்தார்.

எப்படியும் பிளஸ் 2 தேர்வு எழுதி பாசாகி விட வேண்டும் என தீர்மானித்த இவர், சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஒரு தனியார்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். பொருளாதாரப் பிரிவு எடுத்து படித்த இவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வகுப்புக்குசென்று வந்தார்.

கண்ணும் கருத்துமாக தேர்வு எழுதிய இவர், தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் 1200க்கு மொத்தம் 740 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.அவர் எடுத்த மதிப்பெண்கள்:

இந்தி- 136, ஆங்கிலம்- 136, பொருளாதாரம்- 102, வணிகவியல்- 137, கணக்கியல் 113, சிறப்பு ஆங்கிலம் 116.

பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் பிரணதி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil