For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேருக்காக பண்ணல.. பாதியிலேயே நிறுத்தல.. தொடரும் சேவை.. பிரணிதாவுக்கு உண்மையிலேயே பெரிய மனசு!

  |

  பெங்களூரு: தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வரும் நடிகை பிரணிதா, இந்த லாக்டவுனில் தொடர்ந்து மக்களின் பசியை ஆற்றி வருகிறார்.

  நடிகை இஷாக்கு ஹர்திக் பாண்டியா மீது காதல்- வீடியோ

  தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொருக்கி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரணிதா.

  டோலிவுட்டில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான மெகா பிளாக்பஸ்டர் படமான அத்தாரண்டிகி தாரேதி படத்தில் நடித்த இவர், தமிழில் கார்த்தியின் சகுனி மற்றும் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  இதுல யாரை காலி பண்ணப் போறாங்கன்னு தெரியலையே.. ரெடியாகிறது மெகா ஹிட் 'த்ரிஷ்யம்' 2 ஆம் பாகம்!இதுல யாரை காலி பண்ணப் போறாங்கன்னு தெரியலையே.. ரெடியாகிறது மெகா ஹிட் 'த்ரிஷ்யம்' 2 ஆம் பாகம்!

  தொடரும் சேவை

  தொடரும் சேவை

  ஆரம்பத்தில் நீண்ட உதவிக் கரங்கள், ஓரிரு உதவிகளை செய்துவிட்டு நின்ற நிலையில், நடிகை பிரணிதாவின் சேவை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்ட லாக்டவுன் நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்டத்தில் இருந்தே பிரணிதா தொடர்ந்து பலரது பசியை ஆற்றி வருகிறார்.

  அன்னபூரணி

  அன்னபூரணி

  பிரணிதா ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளை நடத்தி வரும் சகுனி நடிகை கடந்த 2 மாதங்களாக லட்சம் பேருக்கு அதிகமாக உணவு வழங்கி அன்னபூரணியாக மாறியுள்ளார். பசிக்கும் வயிற்றுக்கு இந்த நேரத்தில் உணவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர், தனது கையாலே சமைத்தும் கொடுத்தது பலரது பாராட்டுக்களை அள்ளியது.

  ரேஷன் பொருட்கள்

  ரேஷன் பொருட்கள்

  இந்நிலையில், நேற்று பல குடும்பங்களுக்கு ரேசன் பொருட்களை தனது அறக்கட்டளையின் மூலமாக நடிகை பிரணிதா வழங்கியுள்ளார். கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் ரசிகர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்தததாகவும், அவர்களுக்கு நன்றி என புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  பாராட்டு

  பாராட்டு

  பெங்களூரை சேர்ந்த நடிகை பிரணிதா தொடர்ந்து கொரோனாவால் வேலையின்றி வாடும் மக்களின் பசியாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். காசு, பணம் பார்க்காமல், தாராளமாக கொடையுள்ளத்துடன் நடந்து கொள்ளும் அவரது உண்மையான மனசை அறிந்த பலரும் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். உங்கள் சேவை தொடரட்டும் என்றும் கூறி வருகின்றனர்.

  அப்போ அது இல்ல

  அப்போ அது இல்ல

  தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பதிவுகளை இட்டு வைராலாக்கி வருகிறார் நடிகை பிரணிதா. தனது ஜிம் தோழியுடன் ஆக்ரோ யோகா செய்யும் புகைப்படத்தை அண்மையில் ஷேர் செய்திருந்த பிரணிதா, அந்த நாட்கள் அழகாக இருந்தன. அப்போது சமூக இடைவெளி எதுவும் இல்லை என தோழி மீது ஏறி படுத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

  ப்ளூவுடன்

  ப்ளூவுடன்

  மனிதர்களை போலவே செல்லப் பிராணிகள் இடத்திலும் அன்பாகவும் பாசமாகவும் அவர்களை பேணி காக்கும் பணியை செய்து வருகிறார் இந்த எனக்கு வாய்த்த அடிமைகள் ஹீரோயின். தனது செல்லப் பிராணி நாய்க்குட்டியான ப்ளூவை குளிக்க வைத்து டவலால் துவட்டி விடும் புகைப்படங்களையும் பதிவிட்டு லைக்குகளை சமீபத்தில் அள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress Pranitha continuously doing her social service from her Pranitha Foundation. She helped over a lakhs of meals earlier. Now she gave Ration to the needy people.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X