‘சின்னச் சின்ன ஆசை..’ ஸ்டைலில் ஆடிப்பாடும் ப்ரணிதா
ஹைதராபாத்: சகுனியில் 'ஸ்ரீதேவி'யாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ப்ரணிதா ஏமாற்றமே தந்தார். இதுவரைத் தமிழில் இரு படங்கள் நடித்திருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை இவருக்கு.
இருந்தாலும் விடாமுயற்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என கலந்து கட்டி வாய்ப்புகள் தேடி வரும் ப்ரணிதாவிற்கு இதுவரை நடித்த படங்கள் எதிலுமே தனிப்பாடல் என்று ஒன்று கிடைக்கவில்லை.
தற்போது கன்னடப் படமொன்றில் அந்த வாய்ப்பு அவருக்கு கை கூடி வந்திருக்கிறதாம். இது குறித்து ப்ரணிதா கூறுகையில்...

தனிப்பாடல் வாய்ப்பு...
தற்போது ‘ஆங்காரகா' என்ற கன்னடப் படமொன்றில் நடித்து வருகிறேன். இப்படத்தில் தனியாக ஆடிப் பாடும் வாய்ப்பு அமைந்துள்ளது.

சாதனா சர்கம் குரலில்...
இப்பாடலுக்கு இசை அர்ஜூன் ஜன்யா. பாடலைப் பாடி இருப்பவர் சாதனா சர்கம். படத்தின் காட்சிகள் கர்நாடகா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப் பட உள்ளது.

குழந்தைகள் புடை சூழ...
குழந்தைகள் புடை சூழ, தண்ணீரில் ஆடிப்பாடி மகிழும் வகையில் காட்சிப்படுத்த இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். முக்கியமாக, இப்பாடலில் ஹீரோ கிடையாது. நானே தனியாக ஆடிப்பாடும் தனிப்பாடல் இது.

சின்னச் சின்ன ஆசை...
படத்தில் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். ஏறக்குறைய இப்பாடல் ரோஜாப் படத்தில் மதுபாலா பாடி ஆடுவாரே, ‘சின்னச் சின்ன ஆசை..' அதுபோன்ற ஒன்று எனக் கூறலாம்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











