பிரணிதா மூத்த மகள் அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாரே.. பிறந்தநாளை அம்மா செம கிராண்டா கொண்டாடிட்டாரே!
பெங்களூர்: சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான பிரணிதா திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சிப் புயலாக இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தனது மூத்த மகள் அர்ணாவின் 4வது பிறந்தநாளை அவருக்கு பிடித்தது போல செம கிராண்டாக நடத்தியுள்ளார்.
ஆர்யாவின் மனைவி சாயிஷா போல பிரணிதாவுக்கும் குறைவான வயது தான். ஆனால், அதற்குள் திருமணம் செய்துக் கொண்டு 2 குழந்தைகளுக்கும் தாயாகி விட்டார்.

வெறும் 33 வயதே ஆகும் நடிகை பிரணிதா ஆரம்பத்தில் கர்நாடகாவில் லீடு ஹீரோயினாக அசத்தினார். அதன் பின்னர், பவன் கல்யாணின் அட்டாரங்கி தாரேதி படத்தில் சமந்தாவுடன் இணைந்து 2வது ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.
சூர்யா, கார்த்தி ஜோடி: தமிழில் உதயன் படத்தின் மூலம் அறிமுகமான பிரணிதா கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்த மாஸ் படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் சூர்யா ஜோடியாக நடித்தார். அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்ததன் பின்னர், தமிழ் சினிமா பக்கமே இவர் வரவில்லை. இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே எப்போதாவது தலை காட்டி வருகிறார்.
திருமணமும் 2 குழந்தைகளும்: கொரோனா காலத்தில் எளிமையான முறையில் தொழிலதிபர் நிதின் ராஜுவை 2021ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் பிரணிதா. 2022ம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறக்க அந்த குழந்தைக்கு அர்ணா என பெயர் வைத்து வளர்த்து வருகிறார். 2024ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். அதன் பின்னரும், கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வருகிறார்.
மகளின் 4வது பிறந்தநாள்: 2022ம் ஆண்டு பிறந்த மகள் அர்ணாவின் 4வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய பிரணிதா சுபாஷ் அதன் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தனது மகளுக்கு கடல் கன்னி (மெர்மெயிட்) பிடிக்கும் என்பதால் அந்த தீமிலேயே பிறந்தநாளை கொண்டாடிவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











