மாலத்தீவில் ஹீரோயின்ஸ் டிராபிக் ஓவரா இருக்கே.. இந்த பக்கம் அந்த நடிகை.. அந்த பக்கம் இந்த ஹீரோயின்

By

சென்னை: பிரபல நடிகைகள் மாலத்தீவில், நீரில் செல்லும் விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீப காலமாக தமிழ், இந்தி, தெலுங்கு ஹீரோயின்கள் மாலத்தீவுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர.

சின்னத்திரை நடிகைகளும் மாலத்தீவு ரிசார்ட்களில் ஜாலியாக சுற்றி வருகின்றனர்.

காதலருடன் டாப்ஸி

காதலருடன் டாப்ஸி

அங்கிருந்தபடி பிகினி, மற்றும் ஜாலியான நீச்சல்குள புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதலர் மற்றும் சகோதரிகளுடன் டாப்ஸி பன்னு, நாகினி நடிகை மெளனி ராய், மந்திரா பேடி உள்பட பல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றிருந்தனர்.

ஹனிமூன் காஜல்

ஹனிமூன் காஜல்

அவர்கள் இன்ஸ்டாவின் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் அவர்கள் அங்கு இருப்பது தெரிய வந்தது. இப்போது, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை காஜல் அகர்வால், தனது கணவருடன் ஹனிமூனுக்காக அங்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடி கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

புதிதாக இணைந்தார்

புதிதாக இணைந்தார்

இந்த மாலத்தீவு விசிட் லிஸ்ட்டில் இப்போது புதிதாக இணைந்திருக்கிறார்கள் நடிகைகள் வேதிகாவும் பிரணிதாவும். தமிழில், அர்ஜுன் ஜோடியாக மதராஸி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா. அடுத்து பாலிவுட்டில் மெகா பட்ஜெட் படம் ஒன்றில் ஒப்பந்தமானார். அது டேக் ஆஃப் ஆகவில்லை என்பதால் தமிழ் சினிமாவுக்கே ரிட்டன் ஆனார்.

இந்தியில் த பாடி

இந்தியில் த பாடி

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, சிம்புவின் காளை, அருண் விஜய்யின் மலை மலை, பாலாவின் பரதேசி, வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் உள்பல பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ள வேதிகா, இந்தியில், த பாடி என்ற படத்தில் அறிமுகமானார்.

கொரோனா காலம்

கொரோனா காலம்

த்ரிஷயம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷிகபூர், இம்ரான் ஹாஸ்மி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கில் சில படங்களில் இப்போது நடித்து வரும் வேதிகா, கொரோனா காலத்தில் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

மேள வரவேற்பு

இப்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு தண்ணீரிலும் தரையிலும் செல்லும் விமானத்தில் இருந்து ரிசார்ட் ஒன்றில் அவர்கள் இறங்கும் இறங்கும் வீடியோவை, இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார், வேதிகா. அங்கு நிற்பவர்கள் மேளம் அடித்தும் கைதட்டியும் அவர்களை வரவேற்கின்றனர்.

நடிகை பிரணிதா

நடிகை பிரணிதா

இதைப் போலவே நடிகை பிரணிதா சுபாஷூம், அந்த விமானத்தில் இருந்து இருந்து இறங்கி வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருவரும் தனித்தனியாக அங்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு ஹீரோயின்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது என்கின்றனர்.

சேஃப்டி முக்கியம்

சேஃப்டி முக்கியம்

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சில நெட்டிசன்ஸ், என்ன வேதிகா முகக் கவசத்தை காணோம், சேஃப்டி முக்கியம் என்றும் கண்டிப்பாக மாஸ்க் போடுங்க என்றும் கூறியுள்ளனர். மாலத்தீவுலதான் தீபாவளி கொண்டாட்டமா, வாழ்த்துகள் என்று பலர் கூறியுள்ளார். பலர் மாலத்தீவுக்கு வந்ததை வரவேற்றுள்ளனர்.

ஸ்பாவில் ஸ்டைலாக

ஸ்பாவில் ஸ்டைலாக

மற்றொரு புகைப்படத்தில் ஸ்பாவில் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார், வேதிகா. கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஸ்பாவில் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார் வேதிகா. உங்க டிரெஸ்சும் அதன் கலரும் சிறப்பு என்று பலர் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X