கொரோனாவால் முடங்கிய வாழ்வாதாரம்... தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு உதவும் பிரபல ஹீரோயின்!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு, நடிகை பிரணிதா தனது அறக்கட்டளை மூலம் உதவுகிறார்.
Recommended Video
அருள்நிதியின் உதயன், கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாசு, ஜெய்யின், எனக்கு வாய்த்த அடிமைகள் உட்பட சில படங்களில் நடித்தவர் பிரணிதா.
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் அதிக வாய்ப்புகள் இல்லாததால் இவர் இந்தியில் இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

விமானப்படை வீரர்
இவர், 1971-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரை மையப்படுத்தி உருவாகும் புஜ்: த பிரைட் ஆப் இந்தியா என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள, புஜ் விமான நிலையத்துக்கு பொறுப்பாளராக இருந்த, விமானப்படை வீரர் விஜய் கர்னிக் என்பவரின் வாழ்க்கைக் கதையை சொல்லும் இந்தப் படத்தை அபிஷேக் துதையா இயக்குகிறார்.

ஹங்கம்மா 2
இதில் அஜய் தேவ்கன் ஹீரோ. மற்றும் சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, ராணா ஆகியோருடன் பிரணிதாவும் நடிக்கிறார். இதையடுத்து, அக்ஷய் கண்ணா, பரேஷ் ராவல், ரிமி சென் உட்பட பலர் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படம், ஹங்கம்மா. காமெடி படமான இதை பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். இது, பூச்சாக்கொரு மூக்குத்தி என்ற மலையாள படத்தின் ரீமேக்.

கொரோனா
இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. பிரியதர்ஷன் இயக்குகிறார். இதில் பிரணிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கொரோனாவால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல் முடியாமலும் உணவின்றியும் தவித்து வருகின்றனர்.

அறக்கட்டளை
இவர்களுக்காகவும் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்காகவும் தனது அறக்கட்டளை மூலம் உதவுகிறார், நடிகை பிரணிதா. அவர்களுக்கு உதவுவதற்குத் தேவையான மொத்த தொகையில், 40 சதவிகிதத்தை, அவரது அறக்கட்டளை ஏற்கனவே திரட்டிவிட்டது. மேலும் நிதி திரட்டுவதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











