பாத் டப்பில் குளியல்.. கர்ப்ப வயிற்றை காட்டி போஸ் கொடுத்த சகுனி ஹீரோயின்.. ஷாக்கான ரசிகர்கள்!

பெங்களூரு: நிறைமாத கர்ப்பமாக உள்ள நடிகை பிரணிதா பாத் டப்பில் சோப்பு நுரையுடன் குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் கன்னட நடிகை பிரணிதா.

பெங்களூருவை சேர்ந்த பிரணிதா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பிரணிதா

தமிழில் பிரணிதா

போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொறுக்கி படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் கார்த்தி உடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்தார். 2015ம் ஆண்டு சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலமணி மேலும், எனக்கு வாய்த்த அடிமைகள், மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

சீக்கிரத்திலேயே திருமணம்

சீக்கிரத்திலேயே திருமணம்

கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் படத்தில் நடித்த பிரணிதா, ராமண அவதாரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு திடீரென நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில், கூடிய விரைவிலேயே தனக்கு குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷமான விஷயத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினார்.

சீமந்தம்

சீமந்தம்

கர்ப்ப அறிவிப்பை வெளியிட்ட பிரணிதாவுக்கு சமீபத்தில் கோலாகலமாக சீமந்தமும் நடைபெற்றது. அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளினார். ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், பாத் டப்பில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

குளிக்கும் புகைபடங்கள்

குளிக்கும் புகைபடங்கள்

கர்ப்ப வயிற்றை காட்டியபடி உள்ளாடையுடன் பாத் டப்பில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா. ஏற்கனவே பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை போட்டு திட்டு வாங்கிய நிலையில், மீண்டும் இப்படி பண்றீங்களேம்மா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கர்ப்ப வயிற்றை காட்டி

கர்ப்ப வயிற்றை காட்டி

முன்னதாக ஆடையில்லாமல் கர்ப்ப வயிற்றை காட்டட்டுமா என ரசிகர்களிடம் பிரணிதா கேட்க, ஏகப்பட்ட ரசிகர்கள் உடனடியாக போடுங்க என்றதும், குளிக்கும் புகைப்படங்களையே பதிவிட்டு கதிகலங்க வைத்துள்ளார். இப்படியெல்லாம் போட்டோக்களை போடாதீங்க, சீக்கிரமாக அழகான குழந்தையை பெற்றெடுத்து வாருங்கள் என சில ரசிகர்கள் அவருக்கு மீண்டும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X