இவரும் அங்கதான் போயிருக்காராமே.. ஊஞ்சல்ல உட்கார்ந்து என்னா ஆட்டம்.. ரசிகர்கள் அட்வைஸ்!
சென்னை: பிரபல நடிகை மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மாலத்தீவு, நடிகைகளின் வெகேஷன் ஸ்பாட்டாகி இருக்கிறது. பெரும்பாலான நடிகைகள் அங்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு பட நடிகைகள் சமீபத்தில் அங்கு சென்றிருந்தனர். அங்கிருந்தபடி தங்கள் பிகினி உட்பட ஹாட் போட்டோக்களை பதிவு செய்தனர்.

ஹனிமூன் தீவு
நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதலர் மற்றும் டாப்ஸி பன்னு தனது சகோதரிகளுடன், நாகினி நடிகை மெளனி ராய், மந்திரா பேடி உட்பட பல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றிருந்தனர். இப்போது, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால், தனது கணவருடன் ஹனிமூனுக்காக அங்கு சென்றார்.

போட்டோஸ் பதிவு
பின்னர், நடிகை வேதிகா தனது குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தார். அங்கிருந்து அவரும் போட்டோக்களை பதிவு செய்திருந்தார். அவர் அங்கிருக்கும் போது நடிகை பிரணிதா சுபாஷூம் அங்கு சென்றார். கன்னட நடிகையான பிரணிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

ஹங்கம்மா பார்ட் 2
தமிழில், அருள்நிதியின் உதயன், கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாசு, ஜெய்யின், எனக்கு வாய்த்த அடிமைகள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியில், புஜ்: த பிரைட் ஆப் இந்தியா என்ற இந்திப் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்து, பிரியதர்ஷன் இயக்கும் ஹங்கம்மா படத்தின் அடுத்த பாகத்தில் நடித்து வருகிறார்.

கொண்டாட்ட ஜாலி
இப்போது மாலத்தீவில் இருக்கும் பிரணிதா, தினமும் அங்கிருந்தபடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். தீபாவளியை அங்கு செம ஜாலியாக கொண்டாடியுள்ள அவருக்கு நெட்டிசன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நம்ப முடியாத அழகா இருக்கீங்க என்று அவரை சிலர் புகழ்ந்துள்ளனர்.

குடும்ப போட்டோ
கடலுக்கு அடியில் நீந்தும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். உள்ள டால்பின் கிடக்கு, பாத்துக்குங்க என ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் அவருடைய குடும்ப போட்டோவை கேட்க, சில நெட்டிசன்ஸ் பிகினி
போட்டோஸ் போடுங்க என்று கேட்டுள்ளனர்.

கூச்சப்படும் புகழ்ச்சி
ஊஞ்சலில் ஆடும் போட்டோவுக்கு கமென்ட் அடித்துள்ள சில ரசிகர்கள், பார்த்து ஆடுங்க என அட்வைஸ் செய்துள்ளனர். உங்கள் அழகை விவரிக்க வார்த்தை இல்லை என்றும் மானே, தேனே, உங்களை போல இந்த உலகத்துல யாருமே அழகா இல்லை, நீங்க வேற லெவல் அழகு என்றும் ஏற்றி இறக்கி, அவரே கூச்சப்படும் அளவுக்குப் புகழ்ந்து தள்ளியுள்ளனர் சிலர்.


Click it and Unblock the Notifications











