»   »  ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை

ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட வாய்ப்புகளை பெற என்ன செய்ய வேண்டும் என நடிகை பிரனிதாவுக்கு அவரது தோழிகள் ஐடியா கொடுத்துள்ளார்களாம். ஆனால் அதையும் அவர் சொதப்பியுள்ளார்.

பெரிய கண்கள், ஸ்லிம்மான உடல் என்று அழகுப் பதுமையாக உள்ளார் நடிகை பிரனிதா. கார்த்தியின் சகுனி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் ஆந்திரா பக்கம் சென்றார்.

டோலிவுட்

டோலிவுட்

தெலுங்கு திரையுலகிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்புகளே அதிகம் வருகிறது. இதனால் நடிகை நொந்து போயுள்ளார்.

ஐடியா

ஐடியா

சில முன்னணி நடிகைகள் எல்லாம் எப்படி வாய்ப்பை பெறுகிறார்கள் தெரியுமா? தங்களை பற்றி காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவ்வப்போது வதந்தியை பரப்பி தான் என தோழிகள் பிரனிதாவிடம் தெரிவித்துள்ளனர்.

பிரனிதா

பிரனிதா

தோழிகளின் அறிவுரையை ஏற்ற பிரனிதா நீருக்கு அடியில் மூழ்கும் பயிற்சி அளிக்கும் வகுப்பில் சேர்ந்து நீருக்கு அடியில் தான் இருப்பதை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

லூசாப்பா நீ?

லூசாப்பா நீ?

எப்பூடி, வீடியோ வெளியிட்டோம்ல என்று பிரனிதா தோழிகளிடம் பெருமையடிக்க அவர்களோ லூசாப்பா நீ, உனக்கு அல்ல செல்போனுக்கு தான் விளம்பரம் கிடைத்துள்ளது. வேறு ஏதாவது முயற்சி செய் என்று கூறியுள்ளார்களாம். என்ன வதந்தியை பரப்பலாம் இல்லை என்றால் வேறு என்ன செய்து சர்ச்சையை கிளப்பலாம் என ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாராம் பிரனிதா.

English summary
Actress Pranitha is not able to be leading heroine inspite of being a beauty. She is now trying to do publicity stunt to get attention.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil