கொரோனா.. நான் மாஸ்க் வாங்கிட்டேன்..நீங்க வாங்கிட்டீங்களா.. ப்ரனீதா ட்விட்!
சென்னை : நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்க பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நடிகை ப்ரனீதா விமானத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு, பாதிக்கபட்டவர்களும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார துறை மற்றும் உலக நாடுகள் அனைத்தும் தேவையில்லா வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர் முக்கியமாக இந்திய அரசு தனது நாட்டு மக்களுக்கும் இதை வலியுறுத்தி உள்ளது .

இந்த நேரத்தில் பல நடிகர் நடிகையர் தங்களின் வெளிநாட்டு பயணங்களையும் கூட்டமாக கூடுவதை தவிர்த்தும் வருகின்றனர். நேற்று நடைபெற்ற தளபதி விஜயின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா கூட எளிமையாக நடத்தப்பட்டது. இதனிடையே நடிகை ப்ரனீதா தைரியமாக தனது விமானபயணத்தை மேற்கொண்டு அதனை தனது சமூக வலைத்தளபக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.
இந்த பயணம் குறித்து, ப்ரனீதா கூறும்போது ஆளே இல்லாத காலியான விமானத்தில் துணிச்சலுடன் நான் பயணித்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் கொரோனா பற்றிய அச்சத்துடன் மற்றவர்களுடன் பேசுவதை தவிர்த்தும் நோய் தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி கையில் தேய்தும் கொண்டிருக்கிறார்கள். அதே போல நீங்களும் சரியான பாதுகாப்புடன் இருங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், உங்களின் மாஸ்க்கை வாங்கி விட்டீர்களா என்று அன்புடன் கேட்டுள்ளார். ப்ரனீதாவின் இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முக்கியமாக ப்ரனீதாவின் இந்த மாஸ்க் அணிந்த புகைப்படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .
இந்த பதிவுக்கு ரசிகர்களும் தங்களின் அன்பை காட்டி வருகின்றனர். இந்த பதிவின் கமெண்டுகளில் ரசிகர்கள் நீங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள் பயணத்தின் போது கவனம் மிக அவசியம் என்றும் பலர் பயணத்தை கொரோனா பரவும் இந்த நேரத்தில் தவிர்த்து இருக்கலாமே என்பது போன்ற அன்பு மிகுந்த கமெண்டுகளை கொடுத்து உள்ளனர் .

ப்ரனீதா கடைசியாக தெலுங்கில் என்.டி.ஆர்.கதாநாயகுடு படத்தில் நடித்து இருந்தார். தற்போது கன்னடத்தில் ராமன அவதாரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் புஜ்: தி ப்ரைட் ஆப் இந்தியா மற்றும் ஹங்காமா 2 படங்களிலும் நடித்து உள்ளார்.



Click it and Unblock the Notifications











